Latest News
Home / இலங்கை / சுமந்திரன் எம்.பியை மறைமுகமாக தாக்கிய சீனித்தம்பி யோகேஸ்வரன்!

சுமந்திரன் எம்.பியை மறைமுகமாக தாக்கிய சீனித்தம்பி யோகேஸ்வரன்!

யாழ்ப்பாணத்தில் ஓர் இனம் வெளியேற்றப்பட்டது, அதற்கு இனச்சுத்திகரிப்பு எனக் கூறுபவர்கள் எங்கள் இனம் அழிக்கப்பட்டமைக்கு எமது இனப்படுகொலை செய்யப்பட்டது எனக் கூறத் தயங்குகின்றார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், உண்மையில் இந்த இனப்படுகொலைக்கு நீதி வேண்டும். இதற்காக சர்வதேசம் எமக்கு உதவ வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு – அம்பாறை இலங்கை தமிழரசுக்கட்சி கிளை ஏற்பாடு செய்த வலிசுமந்த முள்ளிவாய்க்கால் நிகழ்வின் 14 ஆவது நிறைவை அனுஷ்டிக்கும் முகமாக நாவிதன்வெளி 15 ஆம் கிராமம் ஸ்ரீமுருகன் ஆலய வீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் எங்களது அரசியல்வாதிகள் சிலர் கூட இன்று இனப்படுகொலை என கூறுவதற்கு வாய் கூசினவர்களாக இருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் ஓர் இனம் வெளியேற்றப்பட்டது. அதற்கு இனச்சுத்திகரிப்பு எனக் கூறுபவர்கள் எங்கள் இனம் அழிக்கப்பட்டமைக்கு எமது இனப்படுகொலை செய்யப்பட்டது எனக் கூறத் தயங்குகின்றார்கள்.

உண்மையில் இந்த இனப்படுகொலைக்கு நீதி வேண்டும். இதற்காக சர்வதேசம் எமக்கு உதவ வேண்டும்.

இந்த இறந்த ஆத்மாக்கள் எந்த நோக்கத்துக்காக செயற்பட்டதோ நாமும் அதற்காகவே செயற்படத் தயாராக வேண்டும். அவர்களின் தியாகங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

அதற்காக இலங்கைத் தமிழரசுக்கட்சியினர் ஒற்றுமையாக உழைக்க கடமைப்பட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வின் போது நாவிதன்வெளி 15 ஆம் கிராமம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் கூட்டு வழிபாடு இடம்பெற்றது. பின்னர் பூசையை தொடர்ந்து நினைவுச்சுடர் மாவீரர் குடும்பம் சார்பாக இரு தாய்மார் ஏற்றினர்.

அத்துடன் ஒரு நிமிடம் மௌன அஞ்சலியுடன் ஏனையோர் சுடர் ஏற்றினர். மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *