Latest News
Home / உலகம் / சீனாவில் பரவிய கொரோனாவை முதலில் கண்டுபிடித்து எச்சரித்த வைத்தியரிடம் மன்னிப்பு கேட்ட சீனா அரசாங்கம்.

சீனாவில் பரவிய கொரோனாவை முதலில் கண்டுபிடித்து எச்சரித்த வைத்தியரிடம் மன்னிப்பு கேட்ட சீனா அரசாங்கம்.

ஒலுவில் எம். ஜே.எம் பாரிஸ்

சீனாவில் முதல் கொரோனா பாதிப்பு வுஹான் நகரில் கடந்த வருடம் December மாதம் 8ம் திகதி கண்டறியபட்டது. ஆனால் January மாதம் 14ம் திகதி வரை எந்த நடவடிக்கையும் சீனா எடுக்கவில்லை. ஆரம்ப காலங்களில் சீனா இதனை பெரிதாக எடுத்தும் கொள்ளவில்லை. அத்தோடு அதிகாரிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை.


வுஹான் நகரத்தில் லி வென்லியாங் ( Li Wenliang ) எனும் 34 வயதுடைய கண் வைத்தியர் வுஹான் மத்திய வைத்தியசாலையில் வேலை பார்த்து வந்தார். இவர் அங்கு கடமைபுரியும் போது December மாதம் முதல் வாரத்திலே, காய்ச்சலுடன் நிறையப் பேர் வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளனர்.

இவர்களில் 8 பேருக்கு ஒரே மாதிரியான வைரஸ் தாக்கியிருக்கிறது. இந்த வைரஸை சோதித்த Li Wenliang அது சார்ஸ் உருவாக காரணமாக இருந்த கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்த்த வைரஸ் போலவே இருந்ததை கண்டுபிடித்தார். இவ் வைரஸ் தொடர்பாக அவர் சீனா அரசாங்கத்துக்கும் எச்சரிக்கையும் விடுத்தார். அத்தோடு உடனடியாக அவர் வைத்தியர்கள் குழுவாக இருக்கும் We chat சமுக வலைத்தள அப்பில் அந்த செய்தியையும் பகிர்ந்தார்.

Li Wenliang அளித்த மருத்துவ பரிசோதனையின் முடிவை பார்த்து, சீன வைத்தியர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல் இவ் வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் செய்தியை வெளியிட்டு, சீன மக்களுக்கு இவர்தான் உண்மையை வெளியிட்டார்.

ஆனால் சீனா அரசாங்கம்
உடனே இவருக்கு எதிராக வழக்கு தொடுத்தது. இந்த வைரஸ் குறித்து எதுவும் பேசக் கூடாது. யாரிடமும் விவாதிக்க கூடாது. சமூக வலைத்தளங்களில் குறிப்பிடக் கூடாதென்று எச்சரித்துள்ளனர்.

அத்தோடு அவரிடம் இது தொடர்பாக ஒப்பந்தமொன்றிலும் கையெழுத்து வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால் இந்த வைரஸ் குறித்து கண்டுபிடிக்கப்பட்ட சில நாட்களில் அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, கடந்த January மாதம் 10ம் திகதி Li Wenliang நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அதற்கு 2 நாட்களுக்கு முன் கொரோனா தாக்கப்பட்ட பெண்ணொருவருக்கு அவர் சிகிச்சையளித்தார்.
அதன் பின் தான் இவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தநிலையில் February மாதம் 7ம் திகதி கொரோனா வைரஸால் உயிரிழந்தார். இதற்கு பின்னர் தான் இவ் வைரஸ் தொடர்பாக சீன அரசாங்கம் தீவிரம் கவனம் செலுத்தத் தொடங்கியது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக, சீனாவில் மட்டும் இதுவரை 81 ஆயிரம் பாதிக்கப்பட்டனர். 3,255 பேர் உயிரிழந்துள்ளனர். இவ் வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் பரவி, அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவில் இந் நோயை முதன் முதலில் கண்டுபிடித்து எச்சரித்த வைத்தியரிடம் லி வென்லியாங்கிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

கொரோனா வைரஸை முன்பே கண்டுபிடித்த இவரை, அரசாங்கம் பாராட்டாமல், முடக்கியது சீனர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் , லி வென்லியாங்கை தங்களின் ஹீரோ போல கொண்டாடியும் வருகிறார்கள்.

இது தொடர்பாக வுஹான் நகர பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

லி வென்லியாங் எங்களுக்கு கொரோனா குறித்து முதலில் சொன்னவர். ஆனால் அவர் பேச்சை நாங்கள் கேட்கவில்லை. அவர் பேச்சை மதிக்காமல் நாங்கள் அவர் மீது வழக்கு பதிவு செய்தோம். நாங்கள் செய்த தவறு இது. இதை இனி எங்களால் மாற்ற முடியாது.
அவர் சொன்ன போதே நாங்கள் அதி துரிதமாக செயல்பட்டு இருக்க வேண்டும். உடனே செயல்பட்டு இருந்தால் நாங்கள் கொரோனோ வைரஸ் பரவுவதை தடுத்திருக்க முடியும். பல ஆயிரக்கணக்கானோர்
உயிரிழந்திருக்க மாட்டார்கள். ஆனால் முடியாமல் போய்விட்டது.
மக்களுக்காக உயிர் துறந்த லி வென்லியாங்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். அதேபோல் அவரின் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அவருக்கு எதிரான வழக்கையும் வாபஸ் வாங்குகிறோம் என்று சீன அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *