Latest News
Home / ஆன்மீகம் / சிவராத்திரி: மகத்தான பலன்கள் அருளும் மகா லிங்கோத்பவ காலம் சிவன் வழிபாடு

சிவராத்திரி: மகத்தான பலன்கள் அருளும் மகா லிங்கோத்பவ காலம் சிவன் வழிபாடு

சிவராத்திரியான இன்று இரவு முழுக்க விழித்திருந்து வழிபட்டு, மறுநாள் விடியலில் நீராடி, காலை அனுஷ்டானங்களுடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் சேர்த்து முடிக்க வேண்டும்.

சிவராத்திரி பூஜை மாலை 6 மணிக்குத் தொடங்கி மறு நாள் காலை 6 மணி வரையிலும் நான்கு காலமாகச் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு காலத்திலும் அதற்குரிய அபிஷேக, அர்ச்சனைப் பொருள்கள், நைவேத்தியத்தைச் சமர்ப்பித்து, ஸ்தோத்திரம் பதிகப் பாடல்களைப் பாடி வழிபட வேண்டும்

இங்ஙனம் இரவு முழுக்க விழித்திருந்து வழிபட்டு, மறுநாள் விடியலில் நீராடி, காலை அனுஷ்டானங்களுடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் சேர்த்து முடிக்க வேண்டும். சிவராத்திரி அன்று வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள், கோயில்களில் நடக்கும் பூஜையில் கலந்துகொள்ளலாம். சிவராத்திரி  இரவு முழுவதும் ‘சிவபுராண’ உபன்யாசம், சிறப்புச் சொற்பொழிவுகள் பெரும்பாலான கோயில்களில் நடைபெறுகின்றன. அவற்றைக் கேட்டு மகிழலாம்.

சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஸ்வாமியை தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டால்கூட, ‘லிங்கோற்பவ’ காலமாகிய இரவு 11:30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது சிவ தரிசனம் செய்து வழிபட வேண்டும் என்கின்றன ஞானநூல்கள்.

சிவபெருமான் லிங்க வடிவமாகத் தோன்றிய காலம் – லிங்கோற்பவ காலம். இவ்வேளையில் சிவலிங்க திருவடிவின் மகிமைகளைப் படிப்பதும் சிந்திப்பதும் சிறப்பு!

Check Also

தை பிறந்தால் வழி பிறக்கும்!

தமிழ் வருடத்தின் 10 ஆவது மாதமாக வருவது தை மாதம். இந்த மாதத்தில் தான் சூரியன் தனுசு ராசியில் இருந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *