Latest News
Home / இலங்கை / சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அறிவிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சை இன்று ஆரம்பமாக உள்ளது.

அதன்படி, பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களும் காலை 7:45 மணிக்கு பரீட்சை மத்திய நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

நான்காயிரத்து 513 பரீட்சை மத்திய நிலையங்களில் ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு 6 லட்சத்து 22 ஆயிரத்து 352 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் 44 லட்சத்து 23 ஆயிரத்து 746 பேர் பாடசாலை விண்ணப்பதாரிகள் எனவும் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 606 பேர் தனியார் விண்ணப்பதாரிகள் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது

Check Also

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *