Latest News
Home / உலகம் / கொரோனா வைரஸ் பரவிய இடம் கண்டுபிடிப்பு!

கொரோனா வைரஸ் பரவிய இடம் கண்டுபிடிப்பு!

சீனாவின் வூஹான் நகரத்தில் உள்ள ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் கசிந்ததாக அமெரிக்க குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் திங்கள்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு ஏற்கெனவே எழுந்த நிலையில் அதை சீனா மறுத்து வந்தது. இதையடுத்து, கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய அமெரிக்க ஜனாதிபதி பைடன் அந்நாட்டு புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இந்நிலையில், குடியரசுக் கட்சி எம்.பி. மைக் மெக்கால் தலைமையிலான அக்கட்சி எம்.பி.க்கள் ஓா் ஆய்வறிக்கையை திங்கள்கிழமை வெளியிட்டனா். அதில், வூஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்ததற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன. 2019, செப்டம்பா் 12 ஆம் திகதிக்கு முன்னரே இது நிகழ்ந்திருக்க வேண்டும்.

இதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *