Latest News
Home / வாழ்வியல் / கொரோனா தொற்று : காய்ச்சல் இருமலுக்கு முதல் இந்த அறிகுறி ஏற்படும் : புதிய ஆய்வுத் தகவல்!!

கொரோனா தொற்று : காய்ச்சல் இருமலுக்கு முதல் இந்த அறிகுறி ஏற்படும் : புதிய ஆய்வுத் தகவல்!!

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் காய்ச்சல் அல்லது இருமலுக்கு முன் நரம்பியல் அறிகுறிகள் தோன்றக்கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று நோயாளிகளுக்கு பல்வேறு வகையான அறிகுறிகளை காட்டுகிறது. அதுபோல் பல்வேறு பட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது.

 

அன்னல்ஸ் ஆஃப் நியூரோலஜி இதழில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுபவருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் விபரிக்கப்பட்டதன்படி தலைவலி, தலைச்சுற்றல்,

விழிப்புணர்வு குறைதல், கவனம் செலுத்துவதில் சிரமம், வாசனை மற்றும் சுவையின் கோளாறுகள், வலிப்பு தாக்கங்கள், பக்கவாதம், பலவீனம் மற்றும் தசை வலி போன்ற நரம்பியல் பிரச்சினை வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளனர்.

 

“பொது மக்களும் மருத்துவர்களும் இதை அறிந்திருப்பது முக்கியம், ஏனென்றால் சார்ஸ் , கோவ்-2 நோய்த்தொற்று ஆரம்பத்தில் நரம்பியல் அறிகுறிகளுடன் இருக்கலாம், ஏதேனும் காய்ச்சல், இருமல் அல்லது சுவாச பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பு,” என்று ஆய்வின் முன்னணி ஆசிரியர் இகோர் கோரல்னிக் கூறினார்.

பகுப்பாய்வில், விஞ்ஞானிகள் கொரோனா நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய வெவ்வேறு நரம்பியல் நிலைமைகள் மற்றும் அவற்றை எவ்வாறு கண்டறிவது குறித்த வழிமுறைகள் ஆகியவற்றை விவரிக்கின்றனர்.

 

ஆய்வின்படி, இந்த நோய் மூளை, முதுகெலும்பு, நரம்புகள் மற்றும் தசைகள் உட்பட முழு நரம்பு மண்டலத்தையும் பாதிக்கலாம். மூளை ஒக்ஸிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்படலாம் அல்லது பக்கவாதம் ஏற்படக்கூடிய உறைதல் கோளாறுகளால் பாதிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

 

கூடுதலாக, வைரஸ் மூளை, மெனிங்கேஸ் – நரம்பு மண்டலத்தின் பல பகுதிகளை இணைக்கும் ஒரு திசு – மற்றும் மண்டைக்கு அதிர்ச்சி உறிஞ்சியாக செயல்படும் செரிப்ரோஸ்பைனல் திரவம் (CSF) ஆகியவற்றில் நேரடி தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் கூறினர்.

நோய்த்தொற்றுக்கான நோயெதிர்ப்பு மண்டலத்தின் எதிர்விளைவு மூளை மற்றும் நரம்புகளை சேதப்படுத்தும் அலர்ச்சியையும் ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

Check Also

சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள்…

பொதுவாக உடல்நலத்தைப் பாதுகாக்கவும் நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வெள்ளையாக இருக்கும் பொருள்களை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *