Latest News
Home / தொழில்நுட்பம் / கூகுள் தொலைபேசியில் அழைப்பாளர் விவரங்களை அறியும் அம்சம்!

கூகுள் தொலைபேசியில் அழைப்பாளர் விவரங்களை அறியும் அம்சம்!

கூகுள் தொலைபேசியில் அழைப்பாளர் விவரங்களை அறிந்துகொள்ளும் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய அழைப்பாளரின் பெயர் மற்றும் எண்ணை பயனர்களால் முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.

ஒரு அடிப்படை அம்சமாக இருந்தாலும், ஹெட்செட் அணிந்திருப்பவர்களுக்கும் அழைப்பாளரின் விவரங்களைத் தெரிவிக்கும் அம்சம் பயனாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

தேவையற்ற அழைப்புகளைத் தவிர்ப்பதற்கும், பாடல்கள், முக்கிய ஒலிநாடாக்களை கேட்டுக்கொண்டிருக்கும்போது வரும் அழைப்புகளை துண்டிப்பதற்கும் அழைப்பாளர் விவரங்களை தெரிவிக்கும் அம்சம் பெரிதும் உதவியாக உள்ளது.

இந்த அம்சத்தைப் பெற கூகுள் போனில் செட்டிங் காலர் ஐடி அனெளன்ஸ்மென்ட் பிரிவில் சென்று பெறலாம்.

இதில் எப்போதுமே காலர் ஐடிக்களைத் தெரிவிக்க வேண்டும் அல்லது ஹெட்செட்களை உபயோகிக்கும்போது மட்டும் தெரிவிக்க வேண்டும் அல்லது காலர் ஐடிக்களைத் தெரிவிக்க வேண்டாம் என்று மூன்று உள்பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் தேவையானவற்றை நாம் தெரிவுசெய்துகொள்ளலாம்.

கூகுள் போனில் மட்டுமல்லாது, மற்ற ஆன்டிராய்ட் செல்போன்களிலும் இந்த அம்சம் கூகுள் செயலி மூலம் வழங்கப்படுகிறது. ஆன்டிராய்ட் செல்போன்களில் அவை இயல்புநிலை டயலர்களாகவும் இருக்கின்றன.

பார்வைத் திறன் குறைபாடுடையோருக்கு இந்த அம்சம் பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

Check Also

சிறுமிகள், பெண்களை அச்சுறுத்தும் AI

(AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் அதனால் விளையும் நன்மை – தீமைகள் ஆகியவை குறித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *