Latest News
Home / தொழில்நுட்பம் / குழுவொன்றின் வீடியோ அழைப்பில் 30 பேர் – அதிகமான மக்களுடன் இணைவதற்கு உதவும் Rakuten Viber

குழுவொன்றின் வீடியோ அழைப்பில் 30 பேர் – அதிகமான மக்களுடன் இணைவதற்கு உதவும் Rakuten Viber

தற்போதைய தொற்றுநோய்களுக்கு மத்தியில் இலங்கையர்கள் மேலும் பல மக்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க பல்வேறு வழிகளை வழங்குவதற்கான வலுவான விருப்பத்தின் காரணமாகவும், வளர்ந்து வரும் தேவை மற்றும் பயன்பாட்டிற்கான பதிலளிப்பாகவும், இலவச மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பாடலுக்கான உறுதிப்பாட்டை வழங்கியிருக்கும் நாட்டின் முன்னணி குறுந்தகவல் அனுப்பும் செயலியான Rakuten Viber, குழுவொன்றில் வீடியோ அழைப்பில் பங்கேற்கக் கூடியவர்களின் திறனை 30 ஆக விரிவுபடுத்தியுள்ளது.

2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தொற்றுநோய் மற்றும் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயங்களின் விளைவுக்குப் பதிலளிக்கும் வகையில் Rakuten Viber, குழு வீடியோ மற்றும் ஓடியோ அழைப்பில் பங்கெடுக்கக் கூடிய ஆகக் கூடிய எண்ணிகையை இரட்டிப்பாக்கி 20 ஆக அதிகரித்து பயன்பாட்டை அதிகரித்துள்ளது.

குழு வீடியோ அழைப்பில் பங்கேற்கக் கூடியவர்களின் எண்ணிக்கையை 30ஆக விரிவாக்கியிருப்பதன் மூலம், பாதுகாப்பான தளமொன்றில் மேலும் பலரை இணைத்துக்கொள்ள Viber பயனர்களுக்கு அனுமதிவழங்கியுள்ளது. உயர்தர வீடியோ அழைப்புகளை வழங்குவதன் மூலம், மெய்நிகர் கூட்டத்தில் அதிக பங்கேற்பாளர்களை அழைக்க வேண்டிய அலுவலக ஊழியர்களுக்கும், தங்கள் மாணவர்களுடன் தொடர்பு கொள்ள புதிய வழிகளைத் தேடும் கல்வியாளர்களுக்கும், வீட்டில் பாதுகாப்பாக இருந்துகொண்டு தமது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரத்தை செலாவிட விருப்புவர்கள் இது வலுச்சேர்ப்பதாக அமையும்.

8,000 பேர் பங்கெடுத்த அண்மைய ஆசிய பசுபிக் பிராந்திய கணக்கெடுப்பிற்கு அமைய 50 வீதத்துக்கும் அதிகமானவர்கள் தமது குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் கதைப்பதற்கு குழு வீடியோ அழைப்புக்களைப் பயன்படுத்துவதுடன், 30 வீதத்துக்கும் அதிகமானவர்கள் பணித் தேவைக்காக இதனைப் பயன்படுத்துகின்றனர்.

இலங்கையிலும் பாடசாலை ஒன்லைன் வகுப்பக்களில் இந்த அம்சம் பயன்படுத்துவது வளர்ந்துவருவதற்கு அப்பால், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து கொள்வதற்கும், வேலை மற்றும் உடற்பயிற்சிக்காக இணையவும் குழு வீடியோ அழைப்பைப் பயன்படுத்தப்படுகின்றமை கருத்துக் கணிப்பு முடிவுகளிலிருந்து தெரியவருகிறது.

புயன்படுத்துபுவர்களின் அந்தரங்கத் தன்மையை நிலைநிறுத்துவதில் Viber அர்ப்பணிப்புடன் இருப்பதுடன், குழு வீடியோ அழைப்புகள் குறியாக்கம் செய்யப்படுகின்றன, இதனை யாரும் – Viber கூட – கேட்கவில்லையென்பது உறுதிசெய்யப்பட்டு உரையாடல்கள் தனிப்பட்ட முறையில் இருக்கும் என்று உத்தரவாதம் அளிக்கிறது.

குறுந்தகவல் செயலிக்கு ஒரு வாரத்தின் பின்னர் டெஸ்க்டொப் மற்றும் கையடக்கத்தொலைபேசி தளங்களுக்கு புதுப்பிப்பு கிரிட் வியூவாகக் கிடைக்கும் என்பதால் வீடியோ அழைப்பின் போது மக்கள் ஒருவருடன் ஒருவர் இலகுவாக தொடர்புகொள்ள முடியும். விரிவாக்கப்பட்ட குழு வீடியோ அழைப்பு Android மற்றும் IOS இல் விரைவில் லைவ் ஆகக் கிடைக்கும் என்பதுடன் இது டெஸ்க்டொப், கையடக்கத் தொலைபேசி இரண்டிலும் செயற்படும். அடுத்த மாதம் குழு வீடியோ அழைப்பில் கலந்துகொள்பவர்களின் திறளை மேலும் அதிகரிக்க இந்த செயலி அர்ப்பணிப்புடன் உள்ளது. ´Viber இலங்கையில் மிகவும் பிரபலமான குறுஞ்செய்தி செயலி என்பதுடன், நாங்கள் தொடர்ந்து எங்கள் தளத்திற்கு வௌவேறு மேம்பாடுகளைச் செய்து வருகிறோம், எனவே எங்கள் பயனர்களுக்கு சிறப்பாக சேவை செய்ய முடியும் மற்றும் குறிப்பாக இந்த கடினமான காலங்களில் அவர்களின் தகவல் தொடர்பு தேவைகளை ஆதரிக்க முடியும். எங்கள் வீடியோ அழைப்பு திறன்களின் படிப்படியான விரிவாக்கத்தின் மூலம், சமூக இடைவெளியைப் பேணுவது தொடர்பான வழிகாட்டுதல்களால் தொடர்ந்து விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இருக்கின்ற போதும், அதிகமான சகாக்கள், நண்பர்கள் அல்லது அன்புக்குரியவர்களுடன் வலுவான உறவுகளை உருவாக்க அதிகமானவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது என நாம் நம்புகிறோம்´ என Rakuten Viber இன் பிரதம விருத்தி அதிகாரி அனா ஸ்னமென்ஸ்கயா பகிர்ந்துகொண்டார்.

Rakuten Viber பற்றி :

Rakuten Viber நாங்கள் மக்களை இணைக்கிறோம். அவர்கள் யார், அல்லது அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது முக்கியமல்ல. எங்கள் உலகளாவிய பயனர் தளம் ஒருவருக்கொருவர் அரட்டைகள், வீடியோ அழைப்புகள், குழு செய்தி அனுப்புதல் மற்றும் அவர்களுக்கு பிடித்த வர்த்தகநாமங்கள் மற்றும் பிரபலங்களுடன் புதுப்பிப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற பல அம்சங்களுக்கான அணுகலைக் கொண்டுள்ளது. எங்கள் பயனர்களின் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ள பாதுகாப்பான மற்றும் இலவச சூழல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.

Rakuten Viber, Rakuten Inc இன் ஒரு பகுதியாகும். ஈ-வர்த்தகம் மற்றும் நிதிச் சேவையில் உலகின் முன்னணியாளராகும். இது FC Barcelona வின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு சனல் என்பதுடன், Golden State Warriors அதிகாரப்பூர்வ உடனடி செய்தி மற்றும் அழைப்பு பயன்பாட்டுப் பங்காளராகும். Viber உடன் இன்றே இணைந்து உலகின் சிறந்ததொடர்பாடல் அனுபத்தைப் பெற்றுக் கொள்ளவும். மேலதிக தகவல்களைப் பெற lana@viber.com இன் ஊடாக  தொடர்புகொள்ளவும்.

Check Also

சிறுமிகள், பெண்களை அச்சுறுத்தும் AI

(AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் அதனால் விளையும் நன்மை – தீமைகள் ஆகியவை குறித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *