Latest News
Home / விளையாட்டு / காட்டார் இறுதிப் போட்டியே தனது கடைசி ஆட்டம் – மெஸ்ஸி

காட்டார் இறுதிப் போட்டியே தனது கடைசி ஆட்டம் – மெஸ்ஸி

2022 ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி அர்ஜென்டினாவுக்கான தனது கடைசி ஆட்டமாக இருக்கும் என்று லியோனல் மெஸ்ஸி உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று செவ்வாய்கிழமை நடந்த அரையிறுதியில் குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி வென்றது.

இப்போட்டியில் இதுவரை ஐந்து கோல்களை அடித்துள்ள மெஸ்ஸி, உலகக் கிண்ண போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரராக திகழ்கின்றார்.

இந்நிலையில் அந்நாட்டு ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த மெஸ்ஸி, ” பல சாதனைகளை அடைய முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

எனது கடைசி ஆட்டத்தை இறுதிப் போட்டியில் விளையாடுவதன் மூலம் எனது உலகக் கிண்ண பயணத்தை முடித்துக்கொள்கின்றேன்.

அடுத்தவருக்கு பல ஆண்டுகள் ஆகும், ஆனால் என்னால் அதைச் செய்ய முடியும் என நினைக்கவில்லை, இந்த தொடருடன் பயணத்தை நிறைவுக்கு கொண்டுவருவதே சிறந்த முடிவு” என கூறியுள்ளார்.

35 வயதான லியோனல் மெஸ்ஸி தனது ஐந்தாவது உலகக் கிண்ண போட்டியில் விளையாடி, டியாகோ மரடோனா மற்றும் ஜேவியர் மஷெரானோ ஆகிய நான்கு பேரையும் விஞ்சினார்.

இன்று புதன்கிழமை நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் பிரான்ஸ் மொராக்கோவை சந்திக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *