Latest News
Home / உலகம் / கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண்! அதிசயம் ஆனால் உண்மை!

கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண்! அதிசயம் ஆனால் உண்மை!

பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த போதும் மீண்டும் கருவுற்று இரட்டை குழந்தைகளை பெற்றுத்தெடுத்துள்ளார்.

இந்த அரிய சம்பவம் இங்கிலாந்து நாட்டில் இடம்பெற்றுள்ளது.

மருத்துவ உலகில் இதனை சூப்பர்ஃபெட்டேஷன் என்று அழைக்கின்றனர்.

ஆண் குழந்தைக்கு நோவா என்றும் பெண் குழந்தைக்கு ரோசாலி என்றும் பெயர் வைத்துள்ளனர்.

ஆண் குழந்தையுடன் ஒப்பிடும் போது பெண் குழந்தை சிறியதாகவும், பலவீனமாகவும் பிறந்து உள்ளது.

இதற்கு காரணம் ரோசாலி முன்கூட்டியே பிறந்தது தான்.

இதனால் ரோசாலி 95 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆண் குழந்தை நோவாக்கு எந்த பிரச்சனையும் இல்லையென்றாலும் அந்த குழந்தையும் மூன்று வாரங்கள் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

சூப்பர்ஃபெட்டேஷன் போன்ற அரிய நிகழ்வுகள் உலகில் 0.3% பெண்களை மட்டுமே பாதிக்கும். ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இரண்டாவது குழந்தை கர்ப்ப காலத்தில் இறக்கிறது.

ஆனால் ரெபேக்கா ராபர்ட்ஸுக்கு பிறந்த இரண்டாவது குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *