Latest News
Home / சுவாரசியம் / ஐ போன் வாங்கும் மோகத்தால் கிட்னியை இழந்த இளைஞன்!!

ஐ போன் வாங்கும் மோகத்தால் கிட்னியை இழந்த இளைஞன்!!

ஐ போன் வாங்கும் ஆசையில் சீன இளைஞர் ஒருவர் கிட்னியை விற்று தற்போது மற்றொரு கிட்னியும் பாதிக்கப்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் அன்ஹூய் மாகாணத்தை சேர்ந்த வாங் ஷாங்கன் (25) வயது இளைஞருக்கு ஐ ஃபோன் வாங்க வேண்டும் என்பது அவருக்கு கனவாக இருந்தது.

ஆனால் அவரிடம் போதிய பணம் இல்லை. இதனால் அப்போது ஷாங்கனிற்கு ஆன்லைன் கள்ளச்சந்தையில் கிட்னி விற்கும் நபர்களின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது.

ஐ ஃபோன் வாங்க வேண்டும் என்பதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு தனது வலது கிட்னியைஇந்திய மதிப்பில் சுமார் 2 லட்ச ரூபாக்கு விற்றுள்ளார்.

தற்போது நோய் தொற்று காரணமாக மற்றொரு கிட்னி பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது தான் அவர் கிட்னி விற்ற விவகாரம் தெரிய வந்துள்ளது.

அவரிடம் பெற்ற தகவலின் அடிப்படையில் 9 பேரை போலீஸார் கைது செய்தனர். இப்போது அந்த இளைஞர் தினமும் டயாலசிஸ் செய்தால் தான் உயிர்வாழ முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் வாங் ஷாங்கன்.

Check Also

உலக புகழ்பெற்ற வைரங்கள் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள்

வேதியியல் ரீதியாக, வைரமானது கார்பன் கனிமத்தின் திட உறுப்பாகும். வைரங்களுக்கு மேற்கத்தேய நாடுகளில் பயன்படுத்தப்படும் சொற்களின் அர்த்தங்கள் பொதுவாக ஒன்றையே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *