Latest News
Home / தொழில்நுட்பம் / ஐபோனில் புதிய வசதி…

ஐபோனில் புதிய வசதி…

ஐபோன் உபயோகிப்பாளர்களுக்கு கூகுள் புதிய வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறது. கூகுளின் தவிர்க்க முடியாத செயலிகளில் ஒன்றான கூகிள் மேப் எனும் வழிகாட்டும் செயலி பல்வேறு தரப்பினருக்கும் தேவைப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. தெரியாத இடம் என்கிற பேச்சுக்கு இடம் கொடுக்காத இச் செயலி தற்போது ஐபோனில் புதிய புதிப்பித்தலை கொண்டுவருகிறது.

கூகுள் வரைபடத்தில் பிரகாசமாக இருந்த திரை அமைப்புடன் டார்க் மூட் எனும் வெளிச்சத்தை குறைந்து காட்டக்கூடிய வசதியும் ஐபோனில் வரவிருக்கிறது. தொலைதூர பயணத்தில் செல்போனின் பாட்டரி சேமிப்பை தக்கவைக்கவும் ,கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

கூகுள் மேப் டார்க் மூட் வசதியை இந்தாண்டு தொடக்கத்தில் ஆண்ட்ராய்டு சாதனங்களில் அறிமுகப்படுத்தியது . ஆனால் ஐபோன் ஐஒஸ் 13 சாதனங்களில் வரவிருக்கும் புதிய வசதி ஆண்ட்ராய்டில் வெளியான திறனைவிட கொஞ்சம் மாற்றமிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கூகுள் மேப் டார்க் மூட் மட்டுமல்லாது தகவலைப் பரிமாறிக்கொள்ளும் படி மெசேஜ் இன்டெக்ரேஷன் வசதியையும் அறிமுகப்படுத்த இருக்கிறது கூகுள்.

மேலும் நாம் இருக்கும் இடத்தை சரியான துல்லியத்துடன் ஐ மெசேஜ் செயலியின் மூலமாக பகிரலாம் என்றதோடு பகிரப்படும் இடத்தின் தகவலை மூன்று நாட்கள் வரை அல்லது நாம் விரும்பும் வரை நீட்டித்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

ஐபோன் தொடுதிரையின் முதல் பக்கத்திலேயே செயலி அமையும் படி செய்ததோடு பயணத்தின்போது எங்கெல்லாம் வாகன நெரிசல் இருக்கிறது என்பதையும் தெரிவிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கூகுள் தரப்பில் அளித்த தகவலில் கூகுள் மேப் டார்க் மூட் வரும் வாரத்தில் ஐபோனில் அறிமுகமாகும் என்றும் அதற்கான அமைப்பில் சென்று டார்க் மூடை தேர்வு செய்து உபயோகப்படுத்தலாம் என்றும் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

Check Also

சிறுமிகள், பெண்களை அச்சுறுத்தும் AI

(AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் அதனால் விளையும் நன்மை – தீமைகள் ஆகியவை குறித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *