Latest News
Home / உலகம் / உலக நாடுகளிடம் கனேடிய பிரதமர் உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

உலக நாடுகளிடம் கனேடிய பிரதமர் உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

கொரோனா வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் அனைத்து நாடுகளுக்கும் சமமாக அதனை வழங்க வேண்டுமென உலக நாடுகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த 100க்கும் மேற்பட்ட மருந்துகள் மீது உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வரகின்றன. இதில் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் மனிதர்களிடம் 3ஆம் கட்ட பரிசோதனை நடத்தப்பட்டு விரைவில் முடிவு வெளியிடப்படவுள்ளது.

இந்நிலையில், வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் அனைத்து நாடுகளுக்கும் சமமாக அதனை அளிக்க வேண்டுமென கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ராம்போசா, ஸ்பெயின், நியூசிலாந்து, எத்தியோப்பியா உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடுகளுக்கு இடையே வேறுபாடு காட்டாமல் அனைத்து நாடுகளுக்கும் மருந்து அளிக்கப்பட வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள ட்ரூடோ, அனைத்து நாட்டு மக்களுக்கும் வேறுபாடு இல்லாமல் மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால் உயிர்களை காக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *