Latest News
Home / விளையாட்டு / உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கும் கொவிட்-19 தொற்று!

உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கும் கொவிட்-19 தொற்று!

டென்னிஸ் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் முன்னணி வீரர் நோவக் ஜோகோவிச்சுக்கு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச டென்னிஸ் தொடர்கள் இரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தொண்டு நிறுவனத்திற்கு நிதி சேர்க்கும் வகையில் அட்ரியா டூவர் தொடரை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த தொடரின் போது, முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த குரேஷியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான போர்னா கோரிக் மற்றும் பல்கேரியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் நட்சத்திரமான கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோருடன் ஜோகோவிச், விளையாடியிருந்தார்.

இந்த பின்னணியிலேயே நோவக் ஜோகோவிச்சுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை நோவக் ஜோகோவிச்சின், மனைவி ஜெலினாவுக்கும் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளார். எனினும், இவர்களது மகன் ஸ்டீபன் மற்றும் மகள் தாரா ஆகியோருக்கு இந்த வைரஸ் நோய் வரவில்லை.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *