Latest News
Home / வாழ்வியல் / உடம்பில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா? தினமும் பச்சை மிளகாயை சாப்பிட்டால்!!!

உடம்பில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா? தினமும் பச்சை மிளகாயை சாப்பிட்டால்!!!

அன்றாட சமையலுக்கு பயன்படும் ஒரு பொருள் தான் பச்சை மிளகாய்.

பச்சை மிளகாய் குறைந்த கலோரிகளை கொண்டது . எனவே இதை கொழுப்பு இல்லாத பொருளாக கூட நமது உணவில் சேர்த்து கொள்ளலாம்.

மேலும் அதில் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன.

அந்தவகையில் தினமும் பச்சை மிளகாய் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • பச்சை மிளகாய் குறைந்த கலோரிகளை கொண்டது . எனவே இதை கொழுப்பு இல்லாத பொருளாக கூட நமது உணவில் சேர்த்து கொள்ளலாம்.
  • உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். அதில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளது. மேலும் வளர்சிதை மாற்றத்தையும் வேகப்படுத்துகிறது.
  • பச்சை மிளகாயில் இருக்கும் பீட்டா கரோட்டின் இதயம் முறையாக செயல்பட உதவுகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவு குறைய வழிவகுக்கிறது. இது நாடிக்கூழ்மைத் தடுப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. இதனால் இருதய நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் குறைகிறது.
  • பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் சவ்வுகள் வழியாக ரத்தம் பாய தூண்டுகிறது . இதனால் சளி சுரப்பது குறைகிறது. இதன் மூலம் சளி போன்ற தொற்றுகளிலிருந்து நம்மை காப்பாற்றி நமக்கு நன்மை அளிக்கிறது.
  • பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆனால் இவற்றை வெளிச்சம் புகாத, சில்லென்று இருக்கும் இடத்தில் தான் சேமித்து வைக்க வேண்டும். இல்லையெனில் வெப்பம், ஒளி மற்றும் காற்று ஆகியவை பச்சை மிளகாயிலுள்ள வைட்டமின் சி-யின் அளவை குறைந்து விடும்.
  • சர்க்கரை நோயாளிகள் பச்சை மிளகாயை சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராகும். ஆனால் சர்க்கரைக்கு மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் பச்சை மிளகாயை எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இன்னும் குறைந்து விடக்கூடும். எனவே சர்க்கரை நோயாளிகள் பச்சை மிளகாயைச் சாப்பிடும் போது கவனமாக சாப்பிட வேண்டும்.
பக்க விளைவுகள்

பச்சை மிளகாயை சாப்பிடுவதால் தீவிர எரிச்சல் உணர்வு உண்டாகும். அது வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்தும்.

சிலருக்கு வயிற்று வலி அல்லது வலியுடன் கூடிய வயிற்றுப்போக்கு ஏற்படும். உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருந்தால் அதை மேலும் அதிகப்படுத்தும். எனவே நீங்கள் பச்சை மிளகாயை தவிர்ப்பது நல்லது.

பச்சை மிளகாயில் கேப்சைசின் உள்ளது. நமது உடலில் இது அதிகமாக இருந்தால் தோல் ஒவ்வாமை ஏற்படும்.

குறிப்பு

பச்சை மிளகாயை சாப்பிடுவதால் நிறைய பலன்கள் உண்டு. ஆனால் அதிகமாக சாப்பிட்டால் அது தீய விளைவை உண்டாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Check Also

சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள்…

பொதுவாக உடல்நலத்தைப் பாதுகாக்கவும் நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வெள்ளையாக இருக்கும் பொருள்களை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *