Latest News
Home / உலகம் / உக்ரைனின் வெடிமருந்து இருப்புகளை உயர்த்த அமெரிக்கா 400 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவி!

உக்ரைனின் வெடிமருந்து இருப்புகளை உயர்த்த அமெரிக்கா 400 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவி!

ரஷ்யாவுடனான அதன் தீவிரப் போரின் போது தீர்ந்துபோன உக்ரைனின் வெடிமருந்து இருப்புகளை உயர்த்துவதற்காக உக்ரைனுக்கு அமெரிக்கா 400 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை வழங்க உள்ளது.

இதில் உயர் துல்லியமான ஹிமார்ஸ் பீரங்கி ரொக்கெட்டுகள் மற்றும் ஹோவிட்சர்கள் அடங்குவதாக, வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள பீரங்கிகளும் குண்டுகளும் தேவை என முன்பு உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தமைக்கு அமைய இந்த உதவி வழங்கப்படுகின்றது.

ஆறுகள் மற்றும் பள்ளங்களை கடக்க அனுமதிக்கும் கவச வாகனங்கள் உள்ளிட்ட இராணுவ உதவிகளை உக்ரைனுக்கு வழங்குவது குறித்து எதிர்வரும் வாரங்களில் ஆலோசிக்கப்படவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பாக்முட் மீதான அதன் பல மாத தாக்குதலைத் தொடர்ந்தது, ரஷ்ய கூலிப்படையினர் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள நகரத்தை சுற்றி வளைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனித்தனியாக, கடந்த செப்டம்பரில் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட கார்கிவ் பிராந்தியத்தின் வடகிழக்கு நகரமான குபியன்ஸ்கில் பகுதியளவு வெளியேற்றத்துக்கு உக்ரைன் உத்தரவிட்டுள்ளது.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *