Latest News
Home / இலங்கை / இலங்கை பேருந்துகளில் அறிமுகமாகும் Transit Card!!

இலங்கை பேருந்துகளில் அறிமுகமாகும் Transit Card!!

பேருந்துகளில் பயணிக்கும் போது பணம் வழங்குவதற்கு பதிலாக முற்கொடுப்பனவு பரிவர்த்தனை அட்டையை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக இலத்திரனியல் முறையை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் செயற்படும் உள்ளூர் நிறுவனமான லங்கா க்லியர் தனியார் நிறுவனம், முற்கொடுப்பனவு பரிவர்த்தனை செயலியை தயாரித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நடத்துனர் மீதி பணம் வழங்கவில்லை என கூறி பயணிகள் சிலர் பணம் செலுத்தாமல் இரகசியமாக பயணிப்பதாக பேருந்து நடத்துநர்களினால் குற்றம் சுமத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பண பறிமாற்றம் செய்வது தொடர்பில் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் முற்பண கொடுப்பனவு அட்டை அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *