Latest News
Home / இலங்கை / இலங்கை நாடாளுமன்ற தேர்தலும் ஐந்து சுவாரஸ்ய தகவல்களும்!!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலும் ஐந்து சுவாரஸ்ய தகவல்களும்!!

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை பெற்று பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் புதிய பிரதமராக பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஐந்து சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சுவாரஸ்ய தகவல்கள் குறித்து தொகுப்பை கீழே காணலாம்,

ஒரு ஆசனத்திற்கான பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய விருப்பு வாக்குகள் : மஹிந்த ராஜபக்ச (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – குருநாகல் மாவட்டம்) – 527,364 வாக்குகள்.

ஒரு ஆசனத்திற்கான பெற்றுக்கொள்ளப்பட்ட குறைந்தபட்ச விருப்பு வாக்குகள் : குலசிங்கம் திலீபன் (ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – வவுனியா) – 3,203 வாக்குகள்.

மாவட்டத்திற்கான வாக்குகளுடன் ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையிலான விருப்பு வாக்குகள் (பிரதான 2 கட்சிகள்)

மஹிந்த ராஜபக்ச (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – குருநாகல் மாவட்டம்) – 81.1%
சஜித் பிரேமதாச (ஐக்கிய மக்கள் சக்தி – கொழும்பு மாவட்டம்) – 78.9%
மிகப்பெரிய இழப்பு (அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றும் வெற்றிபெற முடியாமல் போன வேட்பாளர்கள்)

லக்ஷ்மன் யாபா அபேவர்தனே (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – மாத்தறை மாவட்டம் ) – 71,106 வாக்குகள்
தில்ஷன் விதானகமகே (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – காலி மாவட்டம்) – 56,484 வாக்குகள்
இப்திகர் ஜமீல் (ஐக்கிய மக்கள் சக்தி – களுத்துறை மாவட்டம்) – 54,305 வாக்குகள்

ஒரு ஆசனத்தை வெல்ல விருப்பு வாக்குகளின் குறைந்த வேறுபாடு

416 வாக்குகள், ஐக்கிய மக்கள் சக்தி – மாத்தலை மாவட்டம்

வெற்றி – ரோஹினி குமாரி விஜரத்னே – 27,587 வாக்குகள்
தோல்வி – ரஞ்சித் அலுவிஹரா – 27,171 வாக்குகள்
455 வாக்குகள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – வன்னி மாவட்டம்

வெற்றி – காதர் மஸ்தான் – 13,454 வாக்குகள்
தோல்வி – ஜனக் நந்தகுமார்– 12,999 வாக்குகள்
742 வாக்குகள், இலங்கை தமிழரசு கட்சி – யாழ்ப்பாணம் மாவட்டம்

வெற்றி -தர்மலிங்கம் சித்தார்தன் – 23,840 வாக்குகள்
தோல்வி – சசிகலா ரவீராஜ் 23,098 வாக்குகள்
715 வாக்குகள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – கேகாலை மாவட்டம்

வெற்றி -சுதாத் மஞ்சுலா – 45,970 வாக்குகள்
தோல்வி – சந்த குணசேன – 45,255 வாக்குகள்

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *