Latest News
Home / விளையாட்டு / இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 320-4

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 320-4

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 320 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில் ஜோஸ் பட்லர் 7 ஓட்டங்களுடனும், ஜோ ரூட் 168 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதற்கமைய இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இங்கிலாந்து அணி 185 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

இன்றைய ஆட்டம், ஆரம்பிப்பதற்கு முன்னதாக மழைக்காரணமாக தாமதமாகவே ஆரம்பமானது. இடைவேளைக்கு பிறகான தேநீர் இடைவேளையின் போது மீண்டும் மழைக்குறுக்கிட்டதால், இன்றைய நாள் முடிவடைவதற்கு 35 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இன்றைய ஆட்டம் நிறுத்தப்பட்டது.

காலியில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்காக 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, தினேஷ் சந்திமால் 28 ஓட்டங்களையும் அஞ்சலோ மத்தியூஸ் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், டோமினிக் பெஸ் 5 விக்கெட்டுகளையும் ஸ்டுவர்ட் புரோட் 3 விக்கெட்டுகளையும் ஜெக் லீச் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 320 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்போது ஸெக் க்ரெவ்லி 9 ஓட்டங்களுடனும் டோமினிக் சிப்ளி 4 ஓட்டங்களுடனும் ஜோனி பேயர்ஸ்டொவ் 47 ஓட்டங்களுடனும் டேனியல் லோரன்ஸ் 73 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில், லசித் எம்புல்தெனிய 3 விக்கெட்டுகளையும் தில்ருவான் பெரேரா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினார்.

இன்னமும் 6 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாவது நாளை இங்கிலாந்து அணி நாளை தொடரவுள்ளது.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *