Latest News
Home / விளையாட்டு / இலங்கையை இலகுவாக வீழ்த்தியது இந்தியா!

இலங்கையை இலகுவாக வீழ்த்தியது இந்தியா!

இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 67 ஓட்டங்களால் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 373 ஓட்டங்களைக் குவித்தது.

இந்திய அணி சார்பில் விராட் கோஹ்லி 87 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 113 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

374 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 306 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் போன்று திறமையாகத் துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் தசுன் ஷானக்க 88 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 108 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

தனது 46ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் தசுன் ஷானக்க 2ஆவது சதத்தைக் குவித்ததுடன் 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தார்.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *