Latest News
Home / சுவாரசியம் / இலங்கையின் ஈ -ஸ்போர்ட்ஸ் இனை ‘Samsung Combat Arena 2021’ அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது

இலங்கையின் ஈ -ஸ்போர்ட்ஸ் இனை ‘Samsung Combat Arena 2021’ அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது

இலங்கையில் முதலிடம் வகித்திடும் ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமமும் இலங்கையில் ஈ – ஸ்போர்ட்ஸ் இன் முன்னோடியுமான Samsung, இலங்கையின் இன்று வரையில் திகழும் மிகப் பெரிய பரிசுப் குவியலில் ஒன்றான ஈ – ஸ்போர்ட்ஸ் கேமிங் நிகழ்வு மற்றும் போட்டித் தொடரான ‘Samsung Combat Arena 2021’ இனை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறது.

இந்த ஈ – ஸ்போர்ட்ஸ் கேமிங் நிகழ்வு மற்றும் போட்டித் தொடர் 2021, ஏப்ரல் 24ஆம் திகதி One Galle Face Mall இல் இடம்பெறும். நாடு முழுவதும் உள்ள விளையாட்டாளர்கள் மற்றும் ரசிகர்கள் போட்டிகளில் பங்கேற்கவும் கேமிங் நிலையங்கள், Samsung கூடங்கள், ஒன்லைன் மற்றும் ஓஃப் லைன் ஆடையலங்கார போட்டிகள் மற்றும் மேலும் பலவற்றில் பங்கேற்கவும் வரவேற்கப்படுகிறார்கள்.

பல்லாண்டு காலமாக இலங்கையில் கேமர்ஸ்க்கான தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கும் ஈ – ஸ்போர்ட்ஸ் இனை ஊக்குவிப்பதற்கும் Samsung முதலிடம் வகிக்கிறது. ஏனெனில் இளைஞர்கள் அதைப்பற்றி மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் விளைவாக 2020ஆம் ஆண்டில் மட்டும் Samsung, மூன்று பெரிய அளவிலான கேமிங் போட்டித் தொடர்களை வெற்றிகரமாக ஆரம்பித்து முடித்துள்ளது. நாடு முழுவதிலும் இருந்து 1000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் என்பதுடன் ஒவ்வொரு முறையும் 1,75,000 பேர் போட்டிகளை ஸ்ட்ரீமிங் செய்கின்றனர்.

இந்த ‘Samsung Combat Arena 2021’ ஆனது ரூ.1.5 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியிலான அற்புதமான பரிசுகளை கொண்டுள்ளது. இதில் ரூ. 5 இலட்சம் பணத்தொகையும், Smartphones, Gaming monitors, Galaxy Buds+, Smart watches போன்ற ரூ. 10 இலட்சத்துக்கும் அதிகமான மேலும் பல பரிசுகளை உள்ளடக்கியுள்ளது. அத்தோடு ஏப்ரல் 2021 இல் “Mortal Kombat” இன் பிரத்தியேகமான தனித்துவ திரையிடலை கண்டுகளிப்பதற்கான வாய்ப்புக்களும் இதன் வெற்றியாளர்களுக்கு உண்டு.

Samsung Sri Lankaவின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. கெவின் சங்சு யூ கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் ஈ – ஸ்போர்ட்ஸ் இனை ஊக்கப்படுத்துவதில் ‘Samsung Combat Arena 2021’ ஒரு மைல்கல்லாக திகழ்கிறது. இந்நிகழ்வானது கேமர்களுக்கும் திரைப்பட ஆர்வலர்களுக்குமான 4ஆவது நிகழ்வாகும். மேலும் ஈ – ஸ்போர்ட்ஸ் இனை இலங்கையில் மேம்படுத்துவதும் இலங்கையின் இளைஞர்களை மேலும் வலுப்படுத்துவதும் எமது வளர்ந்து வரும் தளத்தின் ஒரு பகுதியாகும். நாம் இது போன்ற மேலும் பல நிகழ்வுகளை எதிர்வரும் காலங்களிலும் நிகழ்த்திட எதிர்ப்பார்க்கிறோம். அதே போல் இலங்கையில் ஈ – ஸ்போர்ட்ஸ் இனை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றி கொண்டு செல்வதன் மூலம் உள்நாட்டு கேமர்களை மேலும் உயர்த்தி உலகளாவிய மேடைக்கு கொண்டு செல்ல எதிர்ப்பார்க்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

Samsung தமது ஈ – ஸ்போர்ட்ஸ் இனை இலங்கையில் இவ்வாறான நிகழ்வுகள் மூலம் மட்டுமல்லாது தமது தயாரிப்புக்கள் மூலமும் தொடர்ந்தும் பரப்புகிறது. Samsung இன் நவீன அறிமுகமான Galaxy A series ஆனது Game booster technology, 90Hz உடனான display, refresh rate, gaming processors போன்ற மேலும் பல அம்சங்களைக் கொண்டிருப்பதுடன் மேலும் பலவற்றை வழங்குகிறது. Samsung தமது பயனர்களுக்கு உச்ச கேமிங் அனுபவத்தினை வழங்கிடும் நோக்கத்துடன் தமது தொழில்நுட்பத்தினை புதுப்பித்தது.

Samsung Members App பயனர்கள் ‘Samsung Combat Arena 2021’ இல் தங்களுக்கேயான தனித்துவமான combat போட்டிகளில் பங்கேற்க முடியும். Samsung Members App ஆனது அனைத்து பயனர்களையும் ஒரே தளத்துக்குக் கொண்டு வரும் ஒரு சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட App ஆகும். இதன் மூலம் பயனர்களுக்கு படங்கள், வீடியோக்களை பகிர்ந்திடவும், updateகளை பெற்றுக் கொள்ளவும், App தொடர்பான தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்து கொள்ளவும் உதவுகிறது.

இவற்றுக்கு மேலதிகமான போனஸாக பங்கேற்போருக்கும் இரசிகர்களுக்கும் Samsung smartphones, accessories, gaming monitors போன்ற தயாரிப்புக்களுக்கு விஷேட விலைக்கழிவுகளும் சிறப்புச் சலுகைகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்படுகிறது.

Samsung இற்கு ‘Samsung Combat Arena 2021’ ஒரு மைல்கல் நிகழ்வாகும். இது கேமர்களுக்கும் திரைப்பட ஆர்வலர்களுக்கும் ஒரே மாதிரியான ஈ – ஸ்போர்ட்ஸ் மற்றும் அவ்வாறான நடவடிக்கைகளில் பங்கேற்க இடமளிக்கிறது. இலங்கையின் ஈ – ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்கள் எதிர்வரும் ஆண்டுகளில் பல புத்தாக்கங்களையும் நிகழ்வுகளையும் Samsung இடமிருந்து எதிர்ப்பார்த்திட முடியும்.

Check Also

உலக புகழ்பெற்ற வைரங்கள் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள்

வேதியியல் ரீதியாக, வைரமானது கார்பன் கனிமத்தின் திட உறுப்பாகும். வைரங்களுக்கு மேற்கத்தேய நாடுகளில் பயன்படுத்தப்படும் சொற்களின் அர்த்தங்கள் பொதுவாக ஒன்றையே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *