Latest News
Home / இலங்கை / இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மீண்டும் பாடசாலைகள் திறப்பு

இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மீண்டும் பாடசாலைகள் திறப்பு

அரச மற்றும் தனியார் பாடசாலைகள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) வரையறுக்கப்பட்ட வகையில் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

அதற்கமைய தரம் 11, 12 மற்றும் 13ஆம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 3.30 மணிவரை இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஏனயை தரங்களுக்கான கல்வி நடவடிக்கை ஓகஸ்ட் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது சுகாதார வழிகாட்டுதல்களை அவசியமாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கல்வி அமைச்சகம் அனைத்து அதிகாரிகளுக்கும் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, இராஜாங்கனை மற்றும் வெலிகந்த கல்வி வலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதிக்க முன்னர் திறக்கப்படாது என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேநேரம், எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை தயார்படுத்துவதற்காக குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் உப அதிபர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நாட்களில் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறும் அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் கடந்த 13ஆம் திகதி முதல் இரு வாரங்களாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *