Latest News
Home / விளையாட்டு / இந்தியா அணிக்கெதிரான டெஸ்ட்: ரூட்டின் இரட்டை சதத்தால் இங்கிலாந்து 555-8

இந்தியா அணிக்கெதிரான டெஸ்ட்: ரூட்டின் இரட்டை சதத்தால் இங்கிலாந்து 555-8

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான, முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 555 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆட்டநேர முடிவில், ஜெக் லீச் 6 ஓட்டங்களுடனும் டோமினிக் பெஸ் 28 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
…..
சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, இன்றைய இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 555 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது இங்கிலாந்து அணி சார்பில், ரொறி பர்ன்ஸ் 33 ஓட்டங்களுடனும் டோமினிக் சிப்ளி 87 ஓட்டங்களுடனும் டேனியல் லோரன்ஸ் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

ஜோ ரூட் 218 ஓட்டங்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 82 ஓட்டங்களுடனும் ஒலீ போப் 34 ஓட்டங்களுடனும் ஜோஸ் பட்லர் 30 ஓட்டங்களுடனும் ஜொப்ரா ஆர்செர் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், ஜஸ்பிரிட் பும்ரா, அஸ்வின், இசாந் சர்மா, ஷபாஸ் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இன்னமும் 2 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாவது நாளை, இங்கிலாந்து அணி நாளை தொடரவுள்ளது.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *