Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு MOH பிரிவில் நாளை முதல் இரண்டாம் கட்டமாக 5,000 தடுப்பூசிகள்: தடுப்பூசி செலுத்திக்கொள்ள நாளைய நடைமுறை முழு விவரம்.

ஆலையடிவேம்பு MOH பிரிவில் நாளை முதல் இரண்டாம் கட்டமாக 5,000 தடுப்பூசிகள்: தடுப்பூசி செலுத்திக்கொள்ள நாளைய நடைமுறை முழு விவரம்.

-கிரிசாந் மகாதேவன்-

எமது நாட்டிலும் எமது பிரதேசத்திலும் கொரோனா தொற்றாளார்களின் எண்ணிக்கையும்,மரணங்களின் வீதமும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவராவிட்டால் எமது பிரதேசமும், முழு நாடும் பாரிய அனர்த்தத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும். எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒரே வழி தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் மாத்திரமே.

அந்த வகையில் எமது பிரதேசத்தில் (29.07.2021) அதாவது வியாழக்கிழமை முதல் இரண்டாம் கட்டமாக 5,000 சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட இருக்கின்றது.

30 வயதிற்கு மேற்பட்ட ஆண்,பெண் இருபாலாரும் இவ் அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் 18 வயது தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களும் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ளலாம் அவர்கள் மக்களுடன் தொடர்வுடைய களப்பணி (Fieldwork) மேற்கொள்ளும் தொழில் புரியும் நபர்கள் தங்கள் அலுவலக அடையாள அட்டையினை பயன்படுத்தி தடுப்பூசியை செலுத்திக்கொள்ளம்.

நாளைய தினம் (29) தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்கள்

01. சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆலையடிவேம்பு
வாச்சிக்குடா பிரிவில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாரும் மு.ப 08.00 தொடக்கம் பி.ப 4.00 மணிவரை தடுப்பூசிகள் வழங்கப்படும்.

02. இராம கிருஷ்ணா கல்லூரி
ஆலையடிவேம்பு பிரிவில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாரும் மு.ப 08.00 தொடக்கம் பி.ப 4.00 மணிவரை தடுப்பூசிகள் வழங்கப்படும்.

03. இராம கிருஷ்ணா மிஷன் மகா வித்தியாலயம்
அக்கரைப்பற்று7/1 ,அக்கரைப்பற்று7/2 , சின்னமுகத்துவரம் ஆகிய பிரிவுகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாரும் மு.ப 08.00 தொடக்கம் பி.ப 1.00 மணி வரை தடுப்பூசிகள் வழங்கப்படும்.

மேலும் அக்கரைப்பற்று7/3 பிரிவில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாரும் பி.ப 1.00 தொடக்கம் பி.ப 4.00 மணிவரை தடுப்பூசிகள் வழங்கப்படும்.

04. கோளாவில் விநாயகர் வித்தியாலயம்
கோளாவில் 2 பிரிவில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாரும் மு.ப 08.00 தொடக்கம் பி.ப 1.00 மணிவரை தடுப்பூசிகள் வழங்கப்படும்.

மேலும் கோளாவில் 1 பிரிவில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாரும் பி.ப 1.00 தொடக்கம் பி.ப 4.00 மணிவரை தடுப்பூசிகள் வழங்கப்படும்.

தடுப்பூசிகள் யாவும் 08.00 மணிமுதல் பிற்பகல் 04.00 மணி வரை வழங்கப்படும். தடுப்பூசி பெற்றுக் கொள்ள வரும் நபர்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் (NIC) ஆள் அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டுவரும் படி வேண்டிக்கொள்கின்றார் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி எஸ்.அகிலன் அவர்கள்.

Check Also

ஆலையடிவேம்பு, உதயம் விளையாட்டுக் கழகத்தின் தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா – 2024 கோலாகலமாக நடாத்தப்பட ஏற்பாடு….

ஆலையடிவேம்பு, உதயம் விளையாட்டுக் கழகம் நடாத்தும் தமிழ்,சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா மற்றும் இசை நிகழ்வு எதிர்வரும் (19/04/2024) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *