Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளின் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை முழு விபரம்….

ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகளின் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை முழு விபரம்….

2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுகள் கடந்த (25) அன்று வெளியாகிய நிலையில் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆலையடிவேம்பு கல்வி கோட்ட பாடசாலைகளின் புலமைப்பரிசில் 76 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக பாடசாலைகள் ரீதியாக பார்க்கும்போது அறியக்கூடியதாக உள்ளது.

அந்தவகையில் 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் ஆலையடிவேம்பு கோட்டத்தில் உள்ள பாடசாலை ரீதியாக சித்தியடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக பார்க்கும்போது.

கமு/திகோ/விவேகானந்தா வித்தியாலயத்தில் இருந்து பரீட்சைக்கு 37 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 15 மாணவர்கள் (143) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 36 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்கின்றார்கள்.

பிரதேச பாடசாலைகளில் சித்தி வீதம் கூடிய பாடசாலையாக விவேகானந்தா வித்தியாலயம் காணப்படுவதுடன், மேலும் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழிமூல மாணவர்களில் அதிகூடிய புள்ளிகளை பெற்று முதலாம் இடம் பெற்ற மாணவன் ராஜவரதன் கதுராஜ் (181) தோற்றிய பாடசாலையாகவும் காணப்படுகின்றது.

அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஆனந்தரூபன், புலமை பரிசில் மாணவர்களுக்கு கற்பித்த முன்னணி ஆசிரியர் C.பிரபாகரன் அவர்களுக்கும் பிரதேச மக்களால் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

கமு/திகோ/திருவள்ளுவர் வித்தியாலயத்தில் இருந்து பரீட்சைக்கு 56 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 16 மாணவர்கள் (143) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 54 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்கின்றார்கள்.

கமு/திகோ/அன்னை சாரதா கலவன் பாடசாலையில் இருந்து பரீட்சைக்கு 108 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 16 மாணவர்கள் (143) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 98 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்கின்றார்கள்.

கமு/திகோ/பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் இருந்து பரீட்சைக்கு 40 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 09 மாணவர்கள் (143) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 38 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்கின்றார்கள்.

கமு/திகோ/கோளவில் விநாயகர் மகாவித்தியாலயத்தில் இருந்து பரீட்சைக்கு 59 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 08 மாணவர்கள் (143) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 52 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்கின்றார்கள்.

கமு/திகோ/திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் இருந்து பரீட்சைக்கு 36 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 07 மாணவர்கள் (143) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 31 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்கின்றார்கள்.

கமு/திகோ/பெருநாவலர் வித்தியாலயத்தில் இருந்து பரீட்சைக்கு 18 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 05 மாணவர்கள் (143) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 14 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்கின்றார்கள்.

Check Also

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 29 அன்று ஆரம்பம்….

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *