நாட்டில் நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் எமது ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஒன்பது அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சை குழு உள்ளடங்கலாக 10 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்திய நிலையில் போட்டியிடுகின்றன.
தேர்தலில் வாக்களிக்க அண்ணளவாக 19,400 வாக்காளர்கள் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காணப்படுவதுடன் ஆலையடிவேம்பு பிரதேச சபை 10வட்டாரங்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றது.
இவ்வாறு இருக்கின்ற நிலையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற சமூக நோக்குடன் கட்டுப்பணம் செலுத்தி போட்டியிட இருக்கின்ற 10 குழுக்களிலும் இருந்து ஒவ்வொரு குழுவினரின் உத்தியோக பூர்வ வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை கட்டம் கட்டணமாக பதிவிட இருக்கின்றோம்.
அந்த வகையில் இலங்கை தமிழரசு கட்சியில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் 10 தொகுதிகளிலும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை காணலாம்.
இலங்கை தமிழரசு கட்சி சின்னம் (வீடு)
அக்கரைப்பற்று A – சுந்தரராஜா மதன்
அக்கரைப்பற்று B -துளசிமணி மனோகரராஜா
அக்கரைப்பற்று D -பாலசுந்தரம் பிரசாந்த்
ஆலையடிவேம்பு -இரத்தினம் ஜெகநாதன்
கோளாவில் C – கணேசன் தவேந்திரன்
அக்கரைப்பற்று C- புண்ணியமூர்த்தி புருசோத்தமன்
கோளாவில் A- பவானி தர்மதாச
கோளாவில் B-தங்கராசா பூபாலபிள்ளை
பனங்காடு -பரநிருபசிங்கம் புஸ்பராஜ்
கண்ணகிகிராமம் – தர்தலிங்கம் பிரபா