Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவை நடாத்தும் மகளிர் தின சிறப்புப்பட்டிமன்றம்….

ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவை நடாத்தும் மகளிர் தின சிறப்புப்பட்டிமன்றம்….

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் திகதி உலக அளவில் அனுஷ்டிக்கப்பட்டு இருந்த நிலையில் அதனை சிறப்பிக்கும் முகமாக ஆலையடிவேம்பு தமிழ் இலக்கிய பேரவை நடாத்தும் மகளிர் தின சிறப்பு பட்டிமன்றம் (26.03.2023) ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.30 மணிக்கு அக்கரைப்பற்று, விபுலாந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் திரு K.கிஷ்ணமூர்த்தி (தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர்) அவர்களின் தலைமையில் இடம்பெற இருக்கின்றது.

இதன் போது ஆலையடிவேம்பு பிரதேச தமிழ் இலக்கிய பேரவையினால் நடாத்தப்படும் ”இன்றைய சமுதாயத்தில் பெண்கள் மதிக்கப்படுகிறார்கள்? மதிக்கப்படவில்லை?” எனும் தலைப்பில் ஆக்கபூர்வமாக சமூகத்திற்கு தேவையான முக்கிய படிப்பினைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் சிறப்பு பட்டிமன்றமும் இடம்பெற இருக்கின்றது.

பட்டிமன்றத்தின் நடுவராக இறைபணிச் செம்மல் திரு. த. கயிலாயபிள்ளை J.P அவர்கள் காணப்படுவதுடன் பட்டிமன்ற பேச்சாளர்களாக கலாநிதி அனுசூயா சேனாதிராஜா (சிரேஷ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்களம்), தேசமானிய திரு. S. மணிவண்ணன் (அதிபர், கோளாவில் பெருநாவலர் வித்தியாலயம் மற்றும் அகில இலங்கை சமாதான நீதிவான்), திரு.கே.கிஷ்ணமூர்த்தி (தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர், ஆலோசகர் உளவளத்துறை ஆலோசனை மையம் மட்டக்களப்பு), திரு. V. குணாளன் (ஓய்வு நிலை பிரதிக்கல்விப் பணிப்பாளர்), திரு. N. செல்வநாதன் (ஓய்வு நிலை விரிவுரையாளர்), திரு.தா.ஜெயாகர் (சமாதான நீதிவான், குளோபல் நிறுவனத்தின் இயக்குனர்) அவர்களும் கலந்துகொண்டு பட்டிமன்றத்தில் வாதிட இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சிறப்புப்பட்டிமன்றத்திற்கு சமூக செயற்பாடுகளுடன் ஆர்வம் உள்ளவர்கள், இலக்கிய துறையில் ஆர்வம் உள்ளவர்கள், பாடசாலை மாணவர்கள் என்பவர்கள் கலந்து கொண்டு பார்வையிடுவதன் மூலம் பயன்பெறக்கூடியதாக இருக்கும் என்பதுடன் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றனர் ஏற்பாட்டுக்குழுவினர்.

Check Also

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 29 அன்று ஆரம்பம்….

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *