Latest News
Home / Uncategorised / அரசாங்கத்தின் செயற்பாட்டால் வாகனங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!!

அரசாங்கத்தின் செயற்பாட்டால் வாகனங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!!

மோட்டார் வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளமையினால் பாரிய வாகன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வாகனங்கள் விற்பனை செய்யும் இடங்களில் இதுவரையில் பதிவு செய்யப்படாத மூவாயிரம் வாகனங்கள் கூட இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில விற்பனை நிலையங்களில் இரண்டு அல்லது மூன்று வாகனங்களே மீதமாக உள்ளதாகவும், கோரிக்கைக்கு அமைய வாகனங்கள் இல்லாமையினால் மீதமாக உள்ள வாகனங்களை விற்பனை செய்ய முடியாமல் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மக்கள் அதிகமாக கொள்வனவு செய்யும் Suzuki Wagon R, Toyota Passo, Toyota Vitz, Toyota CHR, Wasal, Crase ஆகிய வாகனங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Toyota Axio, Toyota Premio, Toyota Raize ஆகிய மோட்டார் வாகனங்கள் மாத்திரமே விற்பனை நிலையங்களில் உள்ளதாகவும் அந்த வாகனங்களும் பாரியளவு விலை அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய டொயடா எக்ஸியோ வாகனம் ஒன்று 79 லட்சம் ரூபாய்க்கும் அதிக விலையிலும், டொயடா பிரிமியோ வாகனம் 100 லட்சம் ரூபாய் வரையிலும், டொயமா ரைஸ் வாகனம் 80 லட்சம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மோட்டார் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்காமையினால் ஊழியர்களின் சம்பளம் வழங்க முடியாமல் போயுள்ளதாகவும், வங்கி கடன் செலுத்த முடியாமல் போயுள்ளதாகவும், வாகன விற்பனையாளர்கள் பாரிய நிதி நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக பல வாகன விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அரசாங்கம் நிவாரணம் ஒன்றை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Check Also

ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பொங்கல் விழா கொண்டாட்டமும்….

ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலையில் 2024ம் ஆண்டிற்கான உழவர் திருநாளை சிறப்பிக்கும் பொங்கல் விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *