Latest News
Home / உலகம் / அமெரிக்காவை குற்றம்சாட்டிய சில மணி நேரத்துக்குள் சீன தூதரகத்தில் தீ விபத்து!

அமெரிக்காவை குற்றம்சாட்டிய சில மணி நேரத்துக்குள் சீன தூதரகத்தில் தீ விபத்து!

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் தூதரகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ விபத்தில் தூதரக ஊழியர்கள் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தூதரகத்தில் இருந்த பல முக்கிய கோப்புகள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சாம்பலானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்துக்கான காரணம்  குறித்த தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகம் சர்வதேச சட்ட விதிகளை மீறியதாக கூறி அந்த தூதரகத்தை உடனடியாக மூட ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டதாக சீனா கூறியது.

மேலும் இது மூர்க்கத்தனமான மற்றும் நியாயப்படுத்த முடியாத நடவடிக்கை எனக்கூறி சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. எனினும் அமெரிக்கா உடனடியாக இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்டதாக சீனா குற்றம் சாட்டிய சில மணி நேரத்துக்குள் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *