Latest News
Home / இலங்கை / அதிகாரப்பகிர்வு குறித்து நாடாளுமன்றில் பேச்சு : மனோ, சுமா இணக்கம்…. சஜித்துடன் பேசி முடிவு என்கின்றது ஐ.ம.ச.

அதிகாரப்பகிர்வு குறித்து நாடாளுமன்றில் பேச்சு : மனோ, சுமா இணக்கம்…. சஜித்துடன் பேசி முடிவு என்கின்றது ஐ.ம.ச.

நாட்டில் அதிகார பரவலாக்கல் முறைமையை அமுல்படுத்துவதற்கு ஆதரவா இல்லையா என்பது குறித்து சஜித் பிரேமதாசாவுடன் கலந்துரையாடி முடிவை அறிவிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்

இதேவேளை அதிகாரப்பகிர்வுக்கு தமது கூட்டணி இணங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் இந்த விடயம் சம்பந்தமாக கலந்துரையாட தயார் என எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தவகையில் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்புகள் நிறைவடைந்த பின்னர், அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

Check Also

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *