Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று “இளந்தளிர்” மாலை நேர இலவச கல்வி நிலையத்தின் சாதனையாளர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வு….

அக்கரைப்பற்று “இளந்தளிர்” மாலை நேர இலவச கல்வி நிலையத்தின் சாதனையாளர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வு….

உலக சிறுவர் நலன் காப்பகத்தினால் வழிநடாத்தப்படுகின்ற அக்கரைப்பற்று “இளந்தளிர்” மாலை நேர இலவச கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை பாராட்டுதல், சித்திரைப் புத்தாண்டு விளையாட்டில் தமது திறமைகளை வெளிப்படுத்தியவர்கள் மற்றும் ஆளுமை விருத்தி சார்ந்து திறமைகளினை வெளிக்காட்டியவர்கள் போன்றோரை பாராட்டி கௌரவித்து அவர்களிற்கு நினைவுச் சின்னங்கள் வழங்கும் நிகழ்வு (2023.05.21) அன்று வடிகான் வீதி, கோளாவில்-03, அக்கரைப்பற்றில் அமைந்துள்ள “இளந்தளிர்” மாலை நேர இலவச கல்வி நிலையத்தில் இடம்பெற்றது.

இதற்கு கலாநிதி. அனுசூயா சேனாதிராஜா (சிரேஸ்ர விரிவுரையாளர், தென் கிழக்கு பல்கலைக்கழகம்) அவர்கள் தலைமை தாங்கியதுடன் பிரதம அதிதியாக வலயக் கல்வி பணிப்பாளர் சார்பாக திரு.எஸ்.சுரனுதன் (பிரதி கல்வி பணிப்பாளர்-நிருவாகம், வலயக்கல்வி அலுவலகம், திருக்கோவில்) அவர்களும், கௌரவ அதிதியாக திரு.வி.பபாகரன் (பிரதேச செயலாளர், ஆலையடிவேம்பு) அவர்களும், சிறப்பு அதிதியாக எஸ்.விவேகானந்தராஜா (முன் பிள்ளைப்பருவ இணைப்பாளர், வலயக்கல்வி அலுவலகம், திருக்கோவில்) அவர்களும். நிறுவன இணைப்பாளர், ஆசியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தயார்படுத்திய ஆசிரியர் திரு.சி.தயாபரன் அவர்களினை மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் இணைந்து கௌரவித்ததுடன், ஆங்கில பாடத்தினை கற்பித்து இம்மாதம் மேற்படிப்பிற்காக செல்லவுள்ள செல்வி.சரண்யா இராமச்சந்திரன் அவர்களை நிறுவனத்தின் தலைவியினால் கௌரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Check Also

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 29 அன்று ஆரம்பம்….

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *