Latest News
Home / இலங்கை / அக்கரைப்பற்று ஆலிம் நகர் விவசாய விரிவாக்கல் நிலையத்தினால் நிலக்கடலை மற்றும் பாசிப்பயறு அறுவடை விழா

அக்கரைப்பற்று ஆலிம் நகர் விவசாய விரிவாக்கல் நிலையத்தினால் நிலக்கடலை மற்றும் பாசிப்பயறு அறுவடை விழா

வி.சுகிர்தகுமார்  

அம்பாரை மத்திய அரசாங்க விவசாயத்திணைக்களத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான பெரும்போக விவசாயிகள் வாரம் இம்மாதம் 07ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக அக்கரைப்பற்று ஆலிம் நகர் விவசாய விரிவாக்கல் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிலக்கடலை மற்றும் பாசிப்பயறு அறுவடை விழா இன்று நடைபெற்றது.

நிலையப் பொறுப்பு விவசாய போதானாசிரியர் ஏ.ஜி.பிர்னாஸ் ஹரிஸ் தலைமையில் இடம்பெற்ற அறுவடை விழாவில் விவசாயப்போதானாசிரியர் எம்.ஜ.எம்.பிறாஸ் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இலுக்குச்சேனை கிராமத்தில் இடம்பெற்ற பாசிப்பயறு அறுவடை விழாவிலும் கலந்து கொண்ட விவசாய திணைக்கள  உத்தியோகத்தர்கள் விவசாய செய்கை முறைமைகள் தொடர்பிலும் தெளிவூட்டினர்.

அத்தோடு மேட்டுநிலப்பயிர்ச்செய்கையினால் விவசாயிகள் அதிக இலாபத்தினை சம்பாதிக்க முடியும் எனவும் இதற்கு தேவையான சகல ஆலோசனைகள் மற்றும் உதவிகளை வழங்க விவசாயத்திணைக்களம் தயாராகவுள்ளதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

 

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *