Latest News
Home / ஆலையடிவேம்பு / விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப்பிரதேங்களில் வெள்ளம்- சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட்டது.

விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப்பிரதேங்களில் வெள்ளம்- சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட்டது.

வி.சுகிர்தகுமார்

அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று தெற்கு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தை தடுக்கும் முகமாகவும்
விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப்பிரதேங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பொருட்டும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் இன்று அகழ்ந்துவிடப்பட்டது.

பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் த.கிரோஜாரனின் ஒத்துழைப்போடு சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடும் பணி முன்னெடுக்கப்பட்டது.

அக்கரைப்பற்று தெற்கு ஆலையடிவேம்பு பிரதேசங்களில் வெள்ள அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவும் களவிஜயத்தின்போது அறிந்து கொண்ட வெள்ள நிலைமையினையும் கருத்தில் கொண்டுமே இத்தீர்மானம் பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் துறைசார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச சபை தவிசாளர் ஆகியோருடன் தொலைபேசியினூடாக மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னரே முடிவுகள் எட்டப்பட்டதுடன் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடப்பட்டது.

இதேநேரம் அம்பாரை மாவட்டத்தில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதுடன் வீதிகள் குடியிருப்புக்கள் என பல இடங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளமையும் இந்நிலை நீடித்தால் வெள்ள அனர்த்தம் ஏற்படும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Check Also

ஆலையடிவேம்பு, உதயம் விளையாட்டுக் கழகத்தின் தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா – 2024 கோலாகலமாக நடாத்தப்பட ஏற்பாடு….

ஆலையடிவேம்பு, உதயம் விளையாட்டுக் கழகம் நடாத்தும் தமிழ்,சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா மற்றும் இசை நிகழ்வு எதிர்வரும் (19/04/2024) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *