Latest News
Home / இலங்கை / மூதூர் பிரதேச லிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு…

மூதூர் பிரதேச லிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு…

திருகோணமலை மாவட்டம், மூதூர் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலையான கமு/மூ/லிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்க்கும் அதி கஸ்ர குடும்பத்தினை சேர்ந்த மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதணி, புத்தகப்பை வழங்கும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர். திரு.தாமோதரம்பிள்ளை சதீஸ்வரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

இப் பாடசாலையானது 1985 ஆம் ஆண்டு கலவர காலப்பகுதி அதனைத்தொடர்ந்து யுத்த காலப்பகுதியிலும் பாதிப்புக்கு உள்ளான பாடசாலையாகும். தற்போழுதும் இவ் மண்டபத்தின் மேல் தோற்றமானது சிதைவடைந்து மழை காலங்களில் மழைநீர் வடிகின்றது இக் காலங்களில் மாணவர்களின் எந்தஒரு நிகழ்வுகளும், பாடசாலையில் எனைய நிகழ்வுகளை நடார்த்துவதற்கும் முடியாதுள்ளது.

மேலும் பாடசாலையில் கல்வி செயற்ப்பாட்டினை எடுத்துக்கொண்டால் கா.பொ.சாதாரண தரத்திற்கு விஞ்ஞானம் மற்றும் கணித பாடத்திற்கான ஆசிரியர்கள் இது வரையும் இல்லாமல் காணப்படுகின்றனர். சனி,ஞாயிறு மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் பிரத்தியோக ஆரியர்களைக் கொண்டு கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது.

சென்ற வருடமான 2022 கா.பொ.சாதாரண தர பரீட்சைக்கு பாடசாலையில் இருந்து 11 மாணவர்கள் தொற்றி இருந்தனர் 11 மாணவர்களும் விஞ்ஞான பாடத்தில் 100% சித்தியினையும் கணித பாடத்தில் 9 மாணவர்கள் A தர சித்தினையும் பெற்று முதூர் கல்வி வலயத்தில் முதற்தர பாடசாலையாக இப் பாடசாலை காணப்படுகின்றது. எனவும் அதிபர் தனது உரையின் போது தெரிவித்திருந்தார்.

மேலும் இன் நிகழ்வில் முதூர் கல்வி வலய விஞ்ஞான பாடத்திற்க்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் M.M.முசாமில் அவர்களும் விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் N.M.கலில் ரகுமான் மற்றும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இன் நிகழ்வில் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான லோ.கஜருபன், சி.காந்தன் ஆகியயோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், பாதணி மற்றும் புத்தகப்பை என்பன மாணவர்களுக்கு வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி 35 சட்டத்தரணிகள் முன்னிலையாக தீர்மானம்

வட்டுகோட்டைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்தார் என்று கூறப்படும் சம்பவம் பெரும் கொந்தளிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *