Latest News
Home / உலகம் / மனிதனைக் கொன்ற ரோபோ! தென்கொரியாவில் பரபரப்பு

மனிதனைக் கொன்ற ரோபோ! தென்கொரியாவில் பரபரப்பு

தென்கொரியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் ரோபோவொன்று பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் தெற்கு கியோங்சாங் மாகாணத்திலுள்ள காய்கரிகளை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் காய்கறி பெட்டிகளை கன்வேயர் பெல்டில் ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ரோபோவொன்றே, காய்கறி பெட்டிக்கு பதிலாக அங்கிருந்த ஊழியர் ஒருவரை கன்வேயர் பெட்டிலில் வைத்து அவரது மார்பையும், முகத்தையும் நசுக்கி ஏற்றியுள்ளது.

இதில்  படுகாயமடைந்த ஊழியர் அங்கிருந்து வெளியே வர முடியாமல் கதற, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் அந்நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவமானது  உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் “இனி வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்களை தடுக்க துல்லியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என  குறித்த தொழிற்சாலை தெரிவித்துள்ளது.

தென்கொரியாவில் ரோபோக்கள் மூலம் இதுபோன்ற விபத்துக்கள் நடப்பது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம், வாகன உதிரிப்பாகங்கள் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ரோபோ அங்குள்ள ஊழியரைக்  கடுமையாக தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

500 வது நாளில் உக்ரைன் போா்!

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்து சனிக்கிழமையுடன் 500 நாள்கள் நிறைவு பெறுகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *