Latest News
Home / கவிதைக்களம் / பிரிவினை! கவிதை…

பிரிவினை! கவிதை…

காதலின் அணுக்கருக்கள்
நம்முள் பரவத் தொடங்கின..

எத்தனை பரவசமான நிகழ்வது!

நீர்த்துளிகளை பனிக்கட்டி ஆக்கியது போல் ஒரு நெருக்கம்

கைக்குட்டைகளில் அன்பை துடைத்துக் கொள்ளுமளவுக்கு ஒரு ஈரம்

இருவருமிடமுமிருந்தது

உதடுகளை தொட்டுக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமும் அப்போது
இல்லாமல் இல்லை

ஆனால் மாறும் காலநிலைகள் நம் காதலின் சூழலை மாற்றாமலில்லை

ஒரு அனல் பனிக்கட்டியை விழுங்கியதைப் போல இருவருமிடையே இடைவேளி வழிந்தது

மொழிகள் முட்டும், கோபம் மண்டையேறும்
அழகின வார்த்தைகள் அத்தனையும் தலைகுனிய நம் வாய்ச்சண்டை நீளும்

சாவசமான சிந்தனனக்குப் பின் இருவரும் ஒருவரை யொருவர் முறித்துக் கொ(ல்ல)ள்ள தீர்மானித்தோம்

அதே நான் உன்னையும்
அதே நீ என்னையும்
இந்த வேளையில்

விலகு வது

அத்தனை எளிதானதாகயில்லை

இருந்தும்

முயற்சிப்போம்….

Check Also

கொரோனாவாகிய நான்

தலைகனம் பிடித்த மானுட இனத்தின் தலைகனம் அறுக்க வந்தவன் நான் . . . . விஞ்ஞானத்திற்கும் மெஞ்ஞானத்திற்கும் சவுக்கடி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *