தென்னிந்தியாவில் அப்பா மகன் உறவை மையமாக வைத்து P.T.தினேஷ் அவர்களால் உருவாக்கப்பட்ட “தந்தை” குறும்படம் இன்றைய தினம் (16) Youtube தளத்தில் வெளியிடப்பட்டு அனைவரது வரவேற்பை பெற்றுவருகிறது.
குறித்த குறும்படத்திற்கான இசையினை எமது அக்கரைப்பற்றினை சேர்ந்த S.கிருஷ்மன் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பதும் சிறப்புக்குரியதாக அமைத்திருக்கிறது.
ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான P.T.தினேஷ் அவர்கள் குறும்படத்தை இயக்கியுள்ளார், படத்தில் பாடகர், இசையமைப்பாளர் S.கிருஷ்மன் அவர்களும் மற்றும் விஜய் டிவி பிக் பாஸ் போட்டியாளரான மோகன் வைத்யா நடித்துள்ளார், இவர் சேது, பரசுராம், அந்நியன் தற்போது பஹிரா, மார்க் ஆண்டனி மற்றும் டோனி தயாரிப்பில் வெளியான LGM போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மகன் கதாபாத்திரத்தில் அறிமுக நாயகனாக சம்மர் தர்ஷன், தனது சிறப்பான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். குழந்தை நட்சத்தரமாக துர்கேஷ்வரா நடித்துள்ளனர்.
இந்த படத்தை SDICE FILMAKERS தயாரித்ததுடன் குறும்படத்திற்கு எல்.மதனாமணி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
அப்பா-மகன் உறவு வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று இதனை உணர்ச்சி பூர்வமான காட்சிகளாக வடிவமைத்துள்ளார் இயக்குனர். குடும்ப சூழ்நிலையை, தந்தையின் அன்பையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த குறும்பட காட்சிகள் மூலம் நமக்கு உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.
குறும்படத்தை பார்வையிட