Latest News
Home / இலங்கை / திருக்கோவில் பிரதேசத்தில் உப மின்சார சபை உத்தியோக பூர்வமாக புதிய கட்டிடத்தில் திறந்துவைப்பு….

திருக்கோவில் பிரதேசத்தில் உப மின்சார சபை உத்தியோக பூர்வமாக புதிய கட்டிடத்தில் திறந்துவைப்பு….

திருக்கோவில் 01 பிரதான வீதியில் தற்காலிகமாக இயங்கி வந்த உப மின்சார சபை திருக்கோவில் பிரதேசவாழ் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருக்கோவில் பிரதே செயலாளர் தங்கையா கஜேந்திரன் அவர்களின் ஊடாக திருக்கோவில் 03 மரக்காலை வீதியில் உத்தியோக பூர்வமாக அமைக்கப்பட்டு மின்சார சபையின் கிழக்குமாகாண பிரதிப்பொதுமுகாமையாளர் WLSK.விஜயதுங்க.DGM அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது..

இவ் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் ,அம்பாறை பிரதான தலைமை பொறியலாளர் MRM.ப(f)ர்காண் திருக்கோவில் பொலிஸ் நிலையப்பொறுபதிகாரி WADP.பத்மகுமார , திருக்கோவில் பிரதேச செயலக உதவிச் செயலாளர் மற்றும் மின்சார சபை பொறியலாளர்கலான U.மயூரன் ML.ஹரீஸ்மொகமட் உதவிப்பொறியலாளர் MIM.நவ்பல் திருக்கோவில் மின்சார சபை அத்தியட்சகர் A.அசோகதீபன் அத்தியட்சகர் சுலக்ஷன், சட்டத்தரணி ஜெயசுதன் ஆகியோரும் மின்சார சபை உழியர்கள் பொதுமக்கள் RDS உறுப்பினர்கள் கிராம சேவகர்கள் மதகுருமார் நலன் விரும்பிகள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் மாணவர்களின் வருவற்பு நடன நிகழ்வும் தேசியகொடி மற்றும் மின்சார சபை கொடிகள் அதிதிகளினால் ஏற்றப்பட்டதுடன் திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய குரு அங்கூசநாத குருக்கள் அவர்களினால் ஆசிர் உரையும் நிகழ்த்தப்பட்டது.

Check Also

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா நிதியுதவி!

இலங்கையின் அபிவிருத்திக்காக 19 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த நிதியானது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *