Latest News
Home / இலங்கை / திருக்கோவில் பிரதேசத்தில் வயல் வரம்புகளில் உணவுப்பயிர் செய்கையினை முன்னெடுப்பதற்காக விவசாயிகளுக்கு பயிர் விதைகள் வழங்கி வைப்பு….

திருக்கோவில் பிரதேசத்தில் வயல் வரம்புகளில் உணவுப்பயிர் செய்கையினை முன்னெடுப்பதற்காக விவசாயிகளுக்கு பயிர் விதைகள் வழங்கி வைப்பு….

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவு தம்பிலுவில் கமலநல சேவை நிலையத்தின் ஊடாக நெல் வயல் வரம்புகளில் உணவுப்பயிர் செய்கையினை மேற்கொள்வதனுாடாக தேசிய உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் எனும் திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேச விவசாயிகளுக்கு மரக்கறி விதைகள் கமநல நிலைய அபிவிருத்தி உத்தியோத்தர் M.அஜந்தன் தலைமையில் இன்றைய தினம் (21) வழங்கி வைக்கட்டது.

மேலும் இப் பயிர்செய்கையின் விதைகள் நடும் ஆரம்பகட்ட நிகழ்வானது தம்பிலுவில் முனையூர் விவசாய கண்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன், தம்பிலுவில் கமநல நிலைய அபிவிருத்தி உத்தியோத்தர் M .அஜந்தன் ,S.சுஜிகாந்தன் விவசாய விரிவாக்கல் நிலையம் தம்பிலுவில், S.சித்திரன் விவசாயிப்போதனாசிரியர் மற்றும் AGM.அஸிம் விவசாய விரிவாக்கல் நிலையம் தம்பிலுவில் ,ச.நடேசபிள்ளை APC தலைவர். A.கதாகரன் அபிவிருத்தி உத்தியோத்தர் திருக்கோவில் பிரதேச செயலகம்ஆகியோர் இன் நிகழ்வில் கலந்து கொண்டு இப் விதைகளை வழங்கி வைத்தனர்.

JK.JATHURSAN.

 

Check Also

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா நிதியுதவி!

இலங்கையின் அபிவிருத்திக்காக 19 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த நிதியானது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *