Latest News
Home / ஆலையடிவேம்பு / சுவாமிகள் நீலமயானந்தா மகராஜ் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு வருகை – அறுபது ஆண்டுகளின் பின்னர் ராமகிருஷ்ண மிஷன் திருக்கோவிலை புனருத்தாரணம் செய்யமுயற்சி…

சுவாமிகள் நீலமயானந்தா மகராஜ் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு வருகை – அறுபது ஆண்டுகளின் பின்னர் ராமகிருஷ்ண மிஷன் திருக்கோவிலை புனருத்தாரணம் செய்யமுயற்சி…

வி.சுகிர்தகுமார்

மட்டக்களப்பு ராமகிருஸ்ண மிசன் ஆஷ்ரமா மற்றும் சிறுவர் இல்லத்தின் சுவாமிகள் நீலமயானந்தா மகராஜ் அவர்கள் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு இன்று வருகை தந்தார்.

அக்கரைப்பற்று சுவாமி விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்திற்கு வருகை தந்த சுவாமி உள்ளிட்டவர்களை இல்லத்தின் ஸ்தாபகர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளையின் தலைமையிலான இயக்குனர் சபை உறுப்பினர்கள் இராமகிருஸ்ண மிசன் பழைய மாணவர்கள் மற்றும் இல்ல மாணவர்கள் பொதுமக்கள் இணைந்து வரவேற்றனர்.

வருகை தந்த சுவாமி உள்ளிட்டவர்கள் விபுலானந்தா சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.

இதன் பின்னராக இல்லத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த சுவாமி விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின் ஸ்தாபகர் த.கயிலாயபிள்ளை சுவாமி அவர்களின் வருகையினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேசம் மகிழ்வடைவதாக கூறினார். மேலும் சுவாமி விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்திற்கும் மட்டக்களப்பு ராமகிருஸ்ண மிசனுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்திய அவர் சுவாமி ஜீவானாநந்தா மகராஜ் அவர்களையும் நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த சுவாமி நீலமயானந்தா மகராஜ் தமது வருகையின் நோக்கம் பற்றி விளக்கினார். அவர் கூறுகையில்

ராமகிருஷ்ணா மிஷன்கள் மற்றும் படங்களில் காணப்படும் கோவில்கள் அங்கு வரும் பக்தர்களின் ஆன்மீகபயிற்சிக்காகவும் தியானம் மற்றும் ஜபம் பஜனை சொற்பொழிவுகள் யோகப்பயிற்சிகள் போன்றவற்றை செய்துகொள்வதற்கான ஒரு புனிதத் தலமாக விளங்கி வருகின்றன. 25க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 300க்கும்மேற்பட்ட கிளைகளுடன் ராமகிருஷ்ண மிஷன் கள் மற்றும் மடங்கள் தன்னுடைய ஆன்மீகப் பயிற்சிகளைசெய்து வருகின்றது அங்கு ஏறக்குறைய 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறவிகள் வாழ்ந்து மக்களுக்கு ஆன்மீக பயிற்சிகளுக்கான கருத்துக்களையும் செயல்களையும் நல்கி வந்திருக்கின்றார்கள்.

ராமகிருஷ்ண மிஷன் இலங்கைக் கிளை சுவாமி விபுலானந்தரின் காலத்தில் மிகவும் அரிய நிலையமாக தொடங்கப் பெற்று அவரால் 26 பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று கொழும்பு கிளிநொச்சி முல்லைத்தீவு யாழ்ப்பாணம் மட்டக்களப்பு அம்பாறை மற்றும் மலையகத்தில் ஒரு சில இடங்களிலும் சிறு சிறு கதைகளை பரப்பிக்கொண்டு மக்களுக்கு கல்வி கலாச்சாரம் ஆன்மீகம் உயர்கல்வி கற்பதற்கான இலவச நிதி உதவிகள் மற்றும் இரண்டு இடங்களில் மாணவர் இல்லங்களும் மாணவிகள் இல்லங்களும் அமைக்கப்பட்டுள்ளதுடன்

உயர்கல்வி கற்பதற்கான மாணவர்களை இந்தியாவுக்கு அனுப்பி அங்கு ஒரு சில மாணவ மாணவிகளுக்கு பல நுண்ணிய அளவில் கல்வி கற்க ஏற்பாடுகளும் செய்து தருகின்றது அது தவிர மாணவர்களின் மக்களின் மருத்துவ சேவைகளும் ஆன்மீக அறநெறிப் பாடசாலைகள் நடத்துதல் புத்தகங்கள் வெளியிடுதல் சர்வ சமய பிரார்த்தனைகள் மற்றும் தலைமைத்துவத்தில் ஈடுபடுதல் மக்களின் கருத்துக்களை அரசு இடத்தில் சரியானவழியில் கொண்டு சேர்த்தல் போன்றவற்றையும் நமது மிஷன் செய்து வந்திருக்கின்றது.

மட்டக்களப்பில் ஆரம்பித்துப் பெற்ற நமதுமிஷன் பள்ளிகள் 1920 ஆம் ஆண்டுகள் முதல் செயல்பட்டுவருகின்றன. மட்டக்களப்பு மண்டூர் பகுதிகளில் சுவாமி அபேதானந்தர் அவர்களின் சிஷ்யையான சகோதரிஅவர்கள் பலஆண்டுகள் சேவை செய்து இறை பணியை ஆரம்பித்து வைத்தார் அதைத் தொடர்ந்து சுவாமிவிபுலானந்தர் சுவாமி நடராஜர் சுவாமி சிவானந்தர் போன்றோர் இந்த பணிகளை செவ்வனே நிறைவேற்றி வந்திருக்கின்றார்கள்

1960 ஆம் ஆண்டுகளில் சுவாமி விபுலானந்தர் அவர்கள் நிதி பற்றாக்குறையின் காரணமாக ராமகிருஷ்ண மிஷன் திருக்கோவிலை சிறிய அளவில் வடிவமைத்திருந்தார் அதைத் தொடர்ந்து தமக்குத் தெரிந்த அனைவரிடமும் இந்த கோயில் சிறந்த முறையில் மிகப்பெரிய  அளவில் வரவேண்டும் என்கின்ற கருத்தையும் முன் வைத்து இருந்த நிலையில் அவர்களது காலம் முடிவுற்றது.

பின்னர் பல சுவாமிகள் இந்தக் கோவிலை புனருத்தாரணம் செய்யமுயற்சி செய்தார்கள். ஆனாலும் அந்தப் பணியை மேற்கொண்டு முடிக்க முடியவில்லை .ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் கழிந்த பின்னர் அந்த திருப்பணியை  தற்போது முன்னெடுத்துள்ளோம்.

இந்த பகவான் திருக்கோவிலில் ஆரம்பத்தில் 150 மக்கள் மட்டுமே அமர முடியும். இந்தக்கோவிலை எல்லோரும் பயன்படுத்தும் வகையில் 500 பேர் வரை அமர்ந்து தியானம் செய்து யோகப் பயிற்சிகள் செய்வதற்கு முன் சொற்பொழிவுகள் கேட்பதற்காகவும் தற்போது வடிவமைக்கவுள்ளோம்.

அத்தோடு சுவாமி விபுலானந்தரின் சமாதி அமைந்துள்ள இடத்தினையும் புனரமைக்க முடிவு செய்துள்ளோம். இதனை ராமகிருஸ்ண மிசனால் செய்து முடிக்க முடியும் என்கின்றபோதும் இப்புனித பணியில் ஒவ்வொரு இந்துவின் பங்களிப்பும் ஒன்றியை வேண்டும் என கருதுகின்றோம்.

இதன் அடிப்படையில் முடிந்தவர்களிடம் முடிந்த நிதியை திரட்டும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளோம். இதற்கு சகலரும் தமது பங்களிப்பை வழங்குமாறும் மிஷன் பாரிய அளவில் மக்களிடத்தில் நன்கொடைகள் கேட்பது இதுவே முதல் முறையாகும் எனவும் கூறினார்.

மக்களிடையே ஏற்படும் அனர்த்தங்கள் எல்லாவற்றிற்கும் தங்களுடைய கருத்தை கொடுப்பதற்காக இத்தனைஆண்டுகளாக தாமாக முன்வந்து நிவாரணப் பணிகளை செய்து வந்திருக்கின்றது.

இப்பொழுது மக்களிடையேஆன்மிக பயிற்சிகளும் அவர்களுக்கு தேவையான மனம் உளவியல் சார்ந்த சிகிச்சைகளை வழங்குவதற்காகவும் இந்த கோவிலை கேந்திரமாக பயன்படுத்த முயற்சி செய்து வருகின்றோம்.

இந்தக் கோவில் திருப்பணிகளைதொடர்ந்து மக்களுக்கு தேவையான ஆன்மீக பண்பாட்டு பயிற்சிகளும் சாத்திர வகுப்புகளும் அதைத்தொடர்ந்து யோக வகுப்புகள் நடைபெறும் புத்தக நிலையம் ஒரு ஆன்மீக கண்காட்சி கூடமும் இடம் பெற்றிருக்கும். இதன் தொடர்ச்சியாக சுவாமி விபுலானந்தரின் கண்காட்சி கூடமும் நிறுவப்பட உள்ளது.

சுவாமிவிபுலானந்தரின் அனைத்து ஆக்கங்களையும் உள்ளடக்கி சுவாமி விபுலானந்தரின் சிந்தனைகள் என்ற தலைப்பில் நான்கு அல்லது ஐந்து தொகுதிகளாக அவருடைய ஆக்கங்கள் அனைத்தும் இருக்கின்றன.அவருடைய யாழ் நூல் மற்றும் மதங்க சூளாமணி போன்ற நூல்களும் மக்களிடையே மீண்டும் அமைக்கப்பெற்று ஆன்மீக கலாச்சாரமும் சுவாமி விபுலானந்தரும் என்கின்ற தலைப்பில் மக்களிடையே சென்றடையும் வண்ணம் ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.

அதைத் தவிரவும் சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு சுவாமி விபுலானந்தர் இளைஞர்களுக்கு கூறும் அறிவுரைகள் சுவாமி விபுலானந்தரின் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் படக்கதைகள் போன்றனவும் இந்த கோவில் கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து ஒவ்வொன்றாக செய்து வர திட்டமிட்டு இருக்கின்றோம்.

இவை அனைத்திற்குமே மக்களுடைய பொருள் உதவியும் உங்களுடைய நட்புக்கரம் தேவைப்படும் எனவே உங்கள் அனைவரையும் இந்த சமூக சமய நல்லுறவை கட்டியெழுப்பும் திருப்பணிக்கு கைகொடுக்க அழைக்கின்றோம்.

நீங்கள் அனைவரும் இந்த புனிதப் பணியில் கலந்துகொண்டு இறைவனுடைய திருவருளை பெற இனிதே அழைக்கின்றோம் என்றும் கூறினார்.

இதனடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள அனைத்து இந்து நிறுவனங்கள் மற்றும் மக்கள் இணைந்து குறிப்பிட்ட ஒரு தொகுதி நிதியை வழங்குவது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன் சிலர் ஆரம்பகட்டமாக முடிந்த நிதியுதவியினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Check Also

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 29 அன்று ஆரம்பம்….

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *