Latest News
Home / ஆலையடிவேம்பு / சுமந்திரன் ஒரு நரி- பொய் பேசுவதில் சம்மந்தரை மிஞ்சியவர் யாருமில்லை -அக்கரைப்பற்று பிரதேசத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன்

சுமந்திரன் ஒரு நரி- பொய் பேசுவதில் சம்மந்தரை மிஞ்சியவர் யாருமில்லை -அக்கரைப்பற்று பிரதேசத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன்

வி.சுகிர்தகுமார்

  சுமந்திரன் ஒரு நரி என தெரிவித்த ஜக்கிய சுதந்திர முன்னணியின் வேட்பாளரும் முன்னை நாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பொய் பேசுவதில் உலகத்தில்; சம்மந்தரை மிஞ்சியவர் யாருமில்லை என தெரிவித்தார்.

அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தமிழ் மக்களின் போராட்டத்தை சர்வதேசத்திற்கு கொண்டு சென்று நிறுத்தியவர் அன்ரன் பாலசிங்கம் எனும் மாபெரும் ராஜதந்தரி. அதேநேரம் சுமந்திரன் என்பவர் தமிழரை நாசமாக்க வந்த ஒரு நரி. அந்த நரியை  உலகில் இரண்டாவது மாபெரும் ராஜதந்திரியாக கருதப்படும் சுமந்திரனுக்கு சமமாக ஒப்பிடுகின்றார் சிறிதரன் எம்பி.  அந்த நரி அன்ரன் பாலசிங்கத்தின் பாதணிக்கு கூட பெறுமதியற்றவர் எனவும் கூறினார்.

இதேநேரம் பொய் பேசுவதில் உலகத்தில் சம்மந்தரை மிஞ்சயவர் யாருமில்லை. அவர் ஒவ்வொரு தீபாவளிக்கும் தமிழ் மக்களுக்கு தீர்வையே பெற்றுக்கெர்டுத்து வருகின்றார். இப்போது இந்தியாவுடன் இணைந்து தீர்வை பெற்றுத்தரப்போவதாக கூறுகின்றார். அவ்வாறு பொய் பேசுகின்றவர் விடுதலை புலிகளுக்கும் தமிழ்த்தேசிய கூட்;டமைப்பிற்கும் தொடர்பில்லை என ஊடகம் ஒன்றில் கூறுகின்றார்.  ஆனாலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியதே தலைவர்தான் என்றார்.

தேசியம் பேசிக்கொண்டு அரசாங்கத்திற்கு ஒரு புறம் ஏசும் இவர்கள் மறு புறம் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கின்றனர்.

தேசியம் பேசும் சுமந்தினுக்கு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் ஒரு தமிழராக இருந்தால் முடிந்தால் நான் தமிழ் மக்களிடமே செல்கின்றேன் என கூறி பாதுகாப்பின்றி வரட்டும் பார்க்கலாம் என சவால் விடுத்தார்.

இன்று அம்பாரை மாவட்டத்தில்தான் அதிகமான படித்த இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பற்றுள்ளனர். இதற்கு காரணம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு. கடந்த மாகாண சபையில் கூட நமக்கு எந்தவித வேலை வாய்ப்பும் வழங்கப்படவில்லை. கடந்த அரசாங்கத்தை காப்பாற்றிய சம்மந்தர் முஸ்லிம்களை அமைச்சர்களாக்கி அவர்களுக்கான வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்தார்.

ஆகவேதான் இந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பை தூக்கி எறிந்துவிட்டு சிறந்த வளமான எதிர்காலத்தை நோக்கி நாங்கள் நகர்கின்றோம் என்றார்.

இன்று அம்பாரையில் பாரிய புரட்சி ஏற்பட்டுள்ளது. இங்குள்ள இளைஞர் படையணி என் பின்னால் அணி திரண்டுள்ளது. இதனூடாக எமது வெற்றி உறுதி என்றார்.

Check Also

அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் மொட்டுக்கட்சியின் அலுவலக திறப்பு விழா – நவசிகல உறுமய கட்சி மொட்டுக்கட்சியுடன் இணைவு!

வி.சுகிர்தகுமார்   அம்பாரை மாவட்டத்தில் போட்டியிட்ட நவசிகல உறுமய கட்சி மொட்டுக்கட்சியுடன் நேற்று இணைந்து கொண்டது. அம்பாரை மாவட்ட நவசிகல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *