Latest News
Home / இலங்கை / சர்வதேச ரீதியில் சாதனைப்படைத்த இலங்கை மாணவன்!!

சர்வதேச ரீதியில் சாதனைப்படைத்த இலங்கை மாணவன்!!

உலகத் தமிழர் சதுரங்க ஒன்றியத்தினால் கடந்த 13 ஆம் திகதி அன்று சர்வதேச ரீதியாக Online மூலமாக வயது எல்லை அற்ற (Open) சதுரங்கப் போட்டி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

குறித்த போட்டியானது Blitz எனப்படும் 5 நிமிடங்களைக் கொண்ட அதிவேக போட்டியாக அமைந்திருந்தது.

இந்த சதுரங்கப் போட்டியில் 21 நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 போட்டியாளர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

Final statistics of entries
Female 26%
Youngest player Age 6
Oldest player Age 62
Under 10 years old 16%
10 to 20 years old 47%
20 to 30 years old 21%
Therefore under 30 – 84%
இதேவேளை, இலங்கையில் இருந்து மாத்திரம் 41 வீதமானவர்கள் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கையர் ஒருவரே முதலிடத்தினையும் பெற்றுள்ளார்.

முறையே 21 நாடுகளும் பின்வருமாறு,

Australia, British Virgin Islands,Canada, Denmark, France, Germany, India, Kenya, Malaysia, Netherlands,NewZealnd, Norway, Oman, Singapore, Srilanka, Sweeden, Switzerland,UAE, United Kingdom, United States, Uruguay

இந்த அதிவேகச் சதுரங்கப் போட்டியில் முதல் வெற்றி, பெற்ற 5 இடங்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு மொத்த பரிசுத்

தொகையாக 345 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட இருக்கின்றன.

வெற்றி பெற்றவர்களின் விபரம்

1 st . Brijeash Saravanabavaan (Srilanka)
2 nd Saravana Prakash Rohit (India)
3 rd Charukgan Muhunthan (UK)
4th Sanjay Ramesh (Canada)
5th Adesh Easwaralingam (Denmark)
Best Woman: Abishna Anojan (India)
மேலும், உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையானது சமய, அரசியலற்ற, சதுரங்கத்தை உலகத் தமிழர்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்கும்

வளர்ப்பதற்காகவும் சதுரங்க ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.

இதேவேளை, இந்த வருடம் பிரித்தானியாவில் உலகளாவிய ரீதியில் ஒரு சதுரங்கப் போட்டியை நடாத்த திட்டமிட்டிருந்த போதும் தவிர்க்க முடியாத காரணத்தால் (Covid19), ஒன்லைன் போட்டியாக நடாத்த முடிவு செய்யப்பட்டது.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *