Latest News
Home / இலங்கை / கொரோனாவை விட கொடிய வைரஸ் : அடுத்த பேராபத்து குறித்து எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!

கொரோனாவை விட கொடிய வைரஸ் : அடுத்த பேராபத்து குறித்து எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!

கொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொடிய மூளையை பாதிக்கும் நோய் ஒன்று அடுத்த தொற்றுநோயாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த ஆபத்தான நோயால் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்படலாம் எனவும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
அடுத்து வரவிருக்கும் பெருந்தொற்றானது இதுவரையான தொற்றுநோய்களில் மிகப்பெரியது எனவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பழங்களை உண்ணும் வெளவால்கள் மூலம் பரவும் தொற்றுநோயான உருமாற்றம் காணும் நிபா, மனித குலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் அடுத்த பெருந்தொற்றாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கடுமையான மூளை வீக்கம், வலிப்பு மற்றும் வாந்தியெடுத்தல் ஆகியவை இந்த சக்திவாய்ந்த நோயின் சில அறிகுறிகளாகும். மலேசியாவில் கடந்த 1999ம் ஆண்டு முதல்முறையாக இந்த நிபா வைரஸ் கண்டறியப்பட்டது.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்ட பாதிப்புகள் நிபா வைரஸ் மிகவும் ஆபத்தானது என்பதைக் காட்டுவதாக கூறும் விஞ்ஞானிகள், இதன் இறப்பு விகிதம் 40 முதல் 75% வரை இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இம்பீரியல் கல்லூரியின் ஆய்வுகளின்படி கொரோனா பெருந்தொற்றின் இறப்பு விகிதம் வெறும் 1 சதவீதம் மட்டுமே என்றால், உருமாற்றம் காணும் நிபா தொற்றுநோய் இன்னும் பல ஆயிரங்களைக் கொல்லும் என தெரிவிக்கின்றனர்.

மட்டுமின்றி, நிபா பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 45 நாட்கள் வரை அறிகுறிகள் ஏதும் வெளியே தெரியாது என்பதால், பாதிக்கப்பட்டவரால் சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேலாக பலர் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்தும் உள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் இதுவரை 2.5 மில்லியன் மக்கள் மரணமடைந்துள்ளனர், ஆனால் அடுத்துவரவிருக்கும் நிபாவால் மரண எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என்றே விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கொரோனா போல் அல்லாமல், நிபா உணவு மூலமாகவும், பாதிக்கப்பட்டவர்களுடன் பழகுதல் மூலமாகவும் அல்லது விலங்குகளின் கழிவுகள் மூலமாகவும் பரவுகிறது.

தென்கிழக்கு ஆசியா, தெற்கு மற்றும் மத்திய ஆபிரிக்கா, அமேசானைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கிழக்கு அவுஸ்திரேலியா உள்ளிட்ட அனைத்தும் உருமாற்றம் காணும் புதிய நிபா தொற்றுநோய்களுக்கு அதிக ஆபத்து உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *