கல்வியமைச்சினால் நடத்தப்பட்ட சிறந்த சேவை செய்தமைக்கான அதிபர்களுக்கான தேர்வில் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட, ஆலையடிவேம்பு கல்வி கோட்ட, அளிக்கப்பை திகோ/புனித சவேரியார் வித்தியாலயத்தில் கடமையாற்றிய அதிபர் மற்றும் சமாதான நீதவானுமான திரு.ஸ்ரீ. மணிவண்ணன் அவர்களின் சேவையைப் பாராட்டி இன்றைய தினம் (19) கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரால் ‘குருபிரதிபா பிரபா’ விருது வழங்கப்பட்டது.
‘குருபிரதிபா பிரபா’ விருதினை பெற்ற திரு.ஸ்ரீ. மணிவண்ணன் அவர்கள் தற்போது திகோ/கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் அதிபராக திறன்பட கடமையாற்றியும் வருகிறாரார்.