Latest News
Home / விளையாட்டு / ஒரே ஒவரில் ஏழு சிக்ஸர்கள்: ருத்துராஜ் கெய்க்வாட் சாதனை!

ஒரே ஒவரில் ஏழு சிக்ஸர்கள்: ருத்துராஜ் கெய்க்வாட் சாதனை!

இந்தியக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான ருத்துராஜ் கெய்க்வாட், ஒரே ஒவரில் ஏழு சிக்ஸர்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் அவர் இந்த சாதனையை படைத்தார்.

அஹமதாபாத் மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற உத்தர்பிரதேஸ் அணிக்கெதிரான போட்டியில், மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிவரும் ருத்துராஜ் கெய்க்வாட், சிவா சிங் வீசிய 49ஆவது ஓவரில் ஒரு நோ போல் உள்ளிட்ட ஏழு பந்துகளுக்கும் ஏழு சிக்ஸர்கள் விளாசினார்.

இதன்மூலம் ஒரே ஒவரில் ஏழு சிக்ஸர்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை அவர் பதிவுசெய்துள்ளார்.

மகாராஷ்டிரா அணியின் தலைவரான ருத்துராஜ் கெய்க்வாட், இப்போட்டியில் 159 பந்துகளில் 16 சிக்ஸர்கள் 10 பவுண்ரிகள் அடங்களாக, ஆட்டமிழக்காது 220 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

Check Also

குட்டி சங்காவிற்கு விருது!

பாடசாலை வீரர்களுக்கான விருது வழங்கும் தேசிய நிகழ்வான Observer – SLT Mobitel school cricketer of the year …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *