Latest News
Home / இலங்கை / ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு வித்தியாபுரம் கிராமத்தில் நெற் செய்கையின் தொழில்நுட்பங்கள் உள்ளடக்கிய வயல் விழா…

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு வித்தியாபுரம் கிராமத்தில் நெற் செய்கையின் தொழில்நுட்பங்கள் உள்ளடக்கிய வயல் விழா…

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு வித்தியாபுரம் கிராமத்தில் முல்லைத்தீவு விவசாய திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் வழிகாட்டலில் காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன விவசாய திட்டம்(CSIAP) இன் அனுசரணையில் ஒட்டுசுட்டான் விவசாய போதனாசிரியரின் ஒழுங்கு படுத்தலில் நெற் செய்கையில் பயன்படுத்தப்படும் பரசூட்முறை மூலமான நாற்று நடுகை தொழில்நுட்பங்கள் ,இயந்திர நாற்றுநடுகை முறைமூலமான நாற்று நடுகை தொழில்நுட்பங்கள்,ரம் விதையிடும் கருவி மூலமான விதைப்பு தொழில்நுட்பங்கள் உள்ளடக்கிய வயல் விழா கடந்த (18) அன்று நடைபெற்றது.

இவ் வயல் விழாவில் மூன்று முறைகளையும் முன்மாதிரியாக செய்முறை ரீதியாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினர் ஆக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் முல்லைத்தீவு மாவட்ட விவசாய பணிப்பாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் ஒட்டுசுட்டான் உதவி பிரதேச செயலாளர், Csiap திட்டத்தின் விவசாய நிபுணர் கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்தர், ஒட்டுசுட்டான் பாடவிதான உத்தியோகஸ்தர் விவசாய போதனாசிரியர்கள் பாடசாலை அதிபர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *