Latest News
Home / விளையாட்டு / ஐ.பி.எல். 2021ஆம் ஆண்டு ஏலம்: Live update

ஐ.பி.எல். 2021ஆம் ஆண்டு ஏலம்: Live update

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 14ஆவது அத்தியாயத்திற்கான ஏலம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகின்றது.

ஏலப்பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 164பேர் இந்திய வீரர்கள். 125 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள். 3 வீரர்கள் இணை நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இதில் இருந்து 22 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 61 வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக 8 அணிகளும் இந்திய மதிப்பில் 196.60 கோடி ரூபாய் வரை செலவழிக்கின்றன.

பஞ்சாப் அணியிடம் அதிகபட்சமாக 53.2 கோடி கோடி ரூபாய் இருக்கிறது. ராஜஸ்தான் 37.85 கோடி ரூபாயும், பெங்களூர் 35.4 கோடி ரூபாயும், மும்பை 15.35 கோடி ரூபாயும், சென்னை 19.9 கோடி ரூபாயும், டெல்லி 13.4 கோடி ரூபாயும், ஹைதராபாத், கொல்கத்தா ஆகியவை தலா 10.75 கோடி ரூபாயும் ஐ.பி.எல். ஏலத்தில் செலவழிக்கலாம்.

இதில் ஒவ்வொரு அணிகளாலும் வாங்கப்படும் வீரர்களின் முழுமையான விபரங்களை இங்கு தெரிந்துக் கொள்ளலாம்.

கருண் நாயரை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்சை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் ஜேஸன் ரோய்யை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

அவுஸ்ரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை டெல்லி கெபிடல்ஸ் அணி 2.2 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

அவுஸ்ரேலியாவின் ஆரோன் பின்ஞ்சை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்தியாவின் ஹனுமா விஹாரியை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

அவுஸ்ரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல்லை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 14.25 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவின் கோதர் ஜாதவ்வை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

பங்களாதேஷின் சகிப் அல் ஹசனை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 3.2 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இங்கிலாந்தின் மொயின் அலியை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 7 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவின் சிவம் டுபேவை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 4.4 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

தென்னாபிரிக்காவின் கிறிஸ் மோறிஸ்சை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 16.25 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இங்கிலாந்தின் டாவிட் மாலனை பஞ்சாப் கிங்ஸ் அணி, 1.5 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

நியூஸிலாந்தின் க்ளென் பிலிப்ஸ், அவுஸ்ரேலியாவின் அலெக்ஸ் கெர்ரி, இங்கிலாந்தின் சேம் பிளிங்ஸ், இலங்கையின் குசல் பெரேரா ஆகியோரை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

நியூஸிலாந்தின் ஆடம் மில்னை மும்பை இந்தியன்ஸ் அணி, 3.2 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

பங்களாதேஷின் முஷ்டபிசுர ரஹ்மானை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 1 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

அவுஸ்ரேலியாவின் ஜெய் ரிச்சட்சனை பஞ்சாப் கிங்ஸ் அணி, 14 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

அவுஸ்ரேலியாவின் குல்டர் நைல்லை மும்பை இந்தியன்ஸ் அணி, 5 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் செல்டோன் கொட்ரேலை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்தியாவின் உமேஷ் யாதவ்வை டெல்லி கெபிடல்ஸ் அணி, 1 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இங்கிலாந்தின் அடில் ராஷித்தை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்தியாவின் ராகுல் சர்மாவை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

ஆப்கானிஸ்தானின் முஜிப் ரஹ்மானை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

நியூஸிலாந்தின் இஷ் சோதியை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்தியாவின் பியூஸ் சவ்லாவை மும்பை இந்தியன்ஸ் அணி, 2.4 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் குய்ஸ் அஹமட்டை எந்த அணியினரும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்தியாவின் ஹிமான்சு ரணா, ஹரி நிசாந்த், ராகுல் சிங், ஹிமாட் சிங், விஷ்னு சோலன்கி, ரிபல் பட்டேல் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்தியாவின் சச்சின் பேபியை றோயல் செலஞ்சர்ஸ் அணி, 20 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவின் ராஜட் படிதரை றோயல் செலஞ்சர்ஸ் அணி, 20 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவின் அறிமுக வீரர் சாருக்கானை சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, 5.2 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவின் அய்ஸ் பதோனி, வெங்கடேஷ் ஐயர் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இந்தியாவின் கிருஸ்னப்பா கௌதமை சென்னை சுப்பர் கிங்ஸ் 9.25 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவின் லுக்மான் மேரிவலவை டெல்லி கெபிடல்ஸ் அணி, 20 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவின் செல்டோன் ஜெக்சனை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 20 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவின் சேட்டா சக்காரியாவை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 1.2 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

அவுஸ்ரேலியாவின் ரிலே மெரிடித்தை பஞ்சாப் கிங்ஸ் அணி, 7 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவின் கரன்வீர் சிங்கை பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவின் சுச்சீத்தை சன்ரைசஸ் ஹைதராபத் அணி 30 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியாவின் விவேக் சிங், கேதர் தேவ்தர், அவி பரோட், முஜ்தபா யூசப், அன்கித் ராஜ்புட், குல்தீப் சென், துசார் பாண்டே, மிதுன் சுதேசன், தேஜாஸ் பரோகா, நேபாலின் லமேச்சேன் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *