Latest News
Home / விளையாட்டு / இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி வெற்றி!

இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி வெற்றி!

2023ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

இதில் நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்போது 49.4 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்களையும் இழந்து 262 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்படி இலங்கை அணிக்கு வெற்றி 263 ஒட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

அதற்கமைய துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி
48.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 263 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

மேலும் இலங்கை அணி சார்பில் சதீர சமரவிக்ரம 91 ஓட்டங்களையும், பெத்தும் நிஷாங்க 54 ஓட்டங்களையும் பெற்று, இலங்கை அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.

Check Also

இலங்கை கிரிக்கெட் அணி குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு

உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணி குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே, அறிவிக்கப்பட்ட இலங்கை அணி இன்று இந்தியா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *