Latest News
Home / விளையாட்டு / இலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

இலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி வீரர்களின் பட்டியலை பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளரும் தலைமை தேர்வாளருமான மிஸ்பா உல் ஹக் வெளியிட்டுள்ளார்.,

இந்த அணியில் இருந்து முன்னணி சகலதுறை வீரர்களான ஷோயிப் மாலிக் மற்றும் மொஹமட் ஹபீஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சர்பராஸ் அஹமட் தலைமையிலான அணியில் பாபர் அசாம், ஆபிட் அலி, அகமது சேஷாத், ஆசிப் அலி, ஃபஹீம் அஷ்ரப், ஃபக்கர் சமான், ஹரிஸ் சோஹைல், ஹசன் அலி, இப்திகர் அஹமட், இமாத் வாசிம், இமாம்-உல்-ஹக், மொஹமட் அமீர், மொஹமட் ஹஸ்னைன், மொஹமட் நவாஸ், மொஹமட் ரிஸ்வான், சதாப் கான், உமர் அக்மல், உஸ்மான் ஷின்வாரி மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக குறித்த தொடரில் இருந்து இலங்கை அணியின் 10 முன்னணி வீரர்கள் விலகியமையினால் ஒருநாள் தொடருக்கு லஹிரு திரிமன்னேயும் ரி-20 போட்டிக்கு தசுன் சானகவும் தலைமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *