Latest News
Home / இலங்கை / இலங்கையில் நிலக்கீழ் சுரங்கத்திற்குள் சிக்கிய கோடிக்கணக்கான பணம்!!

இலங்கையில் நிலக்கீழ் சுரங்கத்திற்குள் சிக்கிய கோடிக்கணக்கான பணம்!!

இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் நாளாந்தம் கோடிக்கணக்கான பணத்தை நிலக்கீழ் சுரங்கத்தில் பதுக்கி வைப்பதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

நாளாந்தம் குறைந்தபட்சமாக மூன்று கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் இவ்வாறு பதுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. குறித்த பணத்தை வங்கிகளில் வைப்பிட முடியாமல் இரகசியமாக நிலத்தில் ம.றைத்து வைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதைப்பொருள் விற்பனை செய்யும் பணத்தை வங்கிகளில் வைப்பிலிடும் கணக்குகளை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களில் வங்கிகளில் பணம் வைப்பிலிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு பணத்தை கொண்டு செல்லப்பட்ட போதிலும் அண்மைய காலமாக அந்த நடவடிக்கையும் முடியாமல் போயுள்ளது.

நாட்டில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் இலட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 கிலோ கிராம் வரையான போதைப்பொருள் தேவைப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளை வேறு முறையில் பக்கட்களில் அடைத்து சில்லறை கடைகளில் விற்பனை செய்வதற்கு வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதன்மூலம் கிடைக்கும் பணம் வேறு நபர்களின் பெயர்களில் வைப்பிலிப்படப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான பணத்தை வங்கிகளில் சேமிக்க முடியாத அளவு சட்டம் கடுமையாகிய பின்னர் போதைப்பொருள் வர்த்தகர்கள் பணத்தை நிலத்திற்குள் பதுக்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பதுக்கி வைக்கப்பட்ட பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இதற்கு முன்னர் கிடைத்த வருமானங்களை கொண்டு சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டது. எனினும் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுவதனால் இவ்வாறு நிலத்திற்குள் சுரங்கம் அமைத்து பணத்தை பதுக்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் விற்பனையாளர்களின் நிலக்கீழ் சுரங்கங்களை அரசுடமையாக்குவதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Check Also

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *